என்னப்பா இது புதுசா இருக்கு.. பிக் பாஸ் 10 மேடையிலே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்? – யார் யார் தெரியுமா?
Bigg Boss Tamil Season 10: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது இன்று (06/09/2026) முதல் ஆரம்பமாகிறது. இதன் ஷூட்டிங் நேற்று நடைபெற்ற நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் முதல் நாளிலே மேடையில் வெளியேற்றப்பட்ட பிரபலங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
மக்கள் செல்வன் விஜய் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளாராக தொகுத்துவரும் ரியாலிட்டி நிகழ்ச்சிதான் பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Tamil Season 10). இந்த நிகழ்ச்சியானது மிகவும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி முதல் தொடங்குகிறது . இந்த நிலசியில் பல்வேறு சீரியல் நடிகர்கள் மற்றும் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் போட்டியாளர்களாக நுழைகிறார்களாம். அந்த விதத்தில், இந்த போட்டியில் பிக் பாஸ் தி காமன் மேன் (Bigg Boss The Common Man) நிகழ்ச்சியின் மூலமாகவும் 3 போட்டியாளர்கள் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது மற்ற சீசன்களை போல இல்லாமல் மிகவும் புதிதாக இந்த சீசன் அமைந்துள்ளதால், கடந்த பிக் பாஸ் சீசன் 9ல் எந்த போட்டியாளர்களும் முதல் நாளிலே வெளியேறவில்லை.
அதற்கு முன் பிக் பாஸ் சீசன் 8- ல் சாச்சனா வெளியேற்றப்பட்டார். அதுபோலவே பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் முதல் நாளிலே மேடையிலே கிட்டத்தட்ட 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளாராம். அவர்கள் குறித்த விவரங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: பிக் பாஸ் முக்கியமல்ல… குழந்தைதான் முக்கியம் – ஜாய் கிரிசில்டா வெளிப்படையான அறிவிப்பு!
போட்டியாளர்கள் வெளியேற்றம் குறித்து பிக் பாஸ் 10 குழு வெளியிட்ட புரோமோ :
வீட்டிற்குள் செல்ல போவது யார்..? Bigg Boss Tamil Season 10 🔥
Bigg Boss Tamil Season 10 GRAND LAUNCH – இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamil… pic.twitter.com/Y6u2FqbJSX
— Vijay Television (@vijaytelevision) September 6, 2026
பிக் பாஸ் சீசன் 10 மேடையில் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்:
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் தொடக்க நாள் ஷூட்டிங் ஏற்கனவே நடைபெற்றிருந்த நிலையில், எந்தெந்த போட்டியாளர்கள் உள்ளே நுழைந்திருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது. அந்த விதத்தில் எந்த சீசனிலும் இல்லாத மாதிரியாக பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் மேடையிலே போட்டியாளர்கள், அங்குள்ள ஆடியன்ஸின் வாக்கின் படி வெளியேற்றப்பட்டுளார்களாம்.
இதையும் படிங்க: எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு.. அரசன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து பேசிய பிரியங்கா மோகன்!
இதில் கிட்டத்தட்ட 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் நடிகை ஷாபி ஷபனம், விமர்சகர் பிரஷாந்த், கவிதா மோகன் மற்றும் சீரியல் நடிகை அக்ஷிதா போன்ற பிரபலங்கள் நிகழ்ச்சியில் மேடையிலே ஆடியன்ஸின் ஓட்டினால் வெளியேற்றப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகிவருகிறது.
பிக் பாஸ் சீசன் 10 முதல் நாள் மேடையிலே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் குறித்து இணையத்தில் பரவும் பதிவு:
💔 EVICTED ON STAGE — SO FAR
❌ Shabi Shabnam
❌ Prashanth
❌ Kavitha Mohan
❌ Akshitha
Four contestants saw their Bigg Boss journey end before even stepping into the house. 😭
Audience decision is final. Hard luck to all four! ❤️#BiggBossTamil10 #BBTamil10 pic.twitter.com/u3kZPoO2de— Kollywood Wire (@KollywoodWire) September 5, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது பெரும் எதிர்பார்ப்புகளுடன் தொடங்கஉள்ளது. கிட்டத்தட்ட 100 நாட்களாக இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்ற நிலையில், நிச்சயம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.