Bigg Boss Tamil Winner List: பிக்பாஸ் தமிழ் சீசன் 1 முதல் 9 வரை வெற்றியாளர்களின் பட்டியல் இதோ
Bigg Boss Tamil Winner List | பிக்பஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் முன்னதாக ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் இதுவரை வெற்றிப் பெற்ற 9 போட்டியாளர்கள் யார் யார் என்ன என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
இந்தியாவில் மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக வலம் வருகிறது பிக்பாஸ். ஆங்கிலத்தில் பிக் பிரதர் என்ற பெயரில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சி இந்தியாவில் பிக் பாஸ் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சி கடந்த 2006-ம் ஆண்டு முதல் இந்தியில் ஒளிபரப்ப தொடங்கியது. தொடர்ந்து இந்தி மொழியில் மட்டும் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சி தென்னிந்திய மொழிகளில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தி மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ஒவ்வொரு மொழிகளிலும் முன்னணி நாயகனாக வலம் வருபவர்கள் தொகுத்து வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழ் மொழியில் முதல் 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8-வது சீசன் முதல் தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சி தமிழ் மொழியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நாளை பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்க உள்ள நிலையில் முன்னதாக 9 சீசன்களிலும் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 முதல் 9 வரை வெற்றியாளர்களின் பட்டியல் இதோ:
பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. இதுதான் தமிழ் நாட்டு மக்கள் பெரும்பாலானோர்க்கு புது அனுபவமாக இருந்தது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் சீசனில் நடிகை ஓவியாவிற்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்த நிலையில் அவர் வெளியேறியதால் நடிகர் ஆரவ் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.




அதனைத் தொடர்ந்து இரண்டாவது சீசனில் தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்திய போட்டியாளர்கள் பலர் இந்த போதிலும் சீசன் முழுக்க பெரிய அளவில் எந்த விசயத்திலும் ஈடுபடாமல் இருந்த ரித்விகா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
Also Read… Kavin: தனது ரெட்டை குழந்தைகளுக்கு பெயர் வைத்த பிக் பாஸ் கவின்.. அவரே வெளியிட்ட பதிவு!
அதனைத் தொடர்ந்து மூன்றாவது சீசனில் முகேன் ராவ், நான்காவது சீசனில் ஆரி, ஐந்தாவது சீசனில் ராஜு ஜெயமோகன், 6-வது சீசனில் அசீம், 7-வது சீசனில் அர்ச்சனா, 8-வது சீசனில் முத்துகுமார் மற்றும் 9-வது சீசனில் நடிகை திவ்யா கணேஷ் வெற்றியாளராக தேர்வு செய்யப்படனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது 10-வது சீசன் தொடங்க உள்ள நிலையில் நாளை போட்டியாளர்களின் பட்டியல் உறுதிப்படுத்தப்படும் என்றும் 105 நாட்கள் முடிவில் யார் வெற்றியாளர்காக இருப்பார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… டிசி-யை தான் எனது முதல் படமாக எடுக்க விரும்பினேன் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!