டிசி-யை தான் எனது முதல் படமாக எடுக்க விரும்பினேன் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!
Arun Matheshwaran on DC Movie: தமிழில் மக்கள் மத்தியில் சுவாரஸ்யமான கதைகளை தரும் இயக்குநராக இருந்துவருபவர் அருண் மாதேஸ்வரன். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக டிசி படம் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் கதை மற்றும் அவரின் ஆசை குறித்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheshwaran) தமிழ் சினிமாவில் தனது வித்தியாசாமான கதைகளை இயக்கி மக்கள் மனதில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவரானார். இவரின் இயக்கத்தில் தமிழில் 2026ம் ஆண்டில் வெளியான புதிய திரைப்படம்தான் டிசி (DC). இதில் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாலிவுட் நடிகை வாமிகா கபி இணைந்து நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் வெளியான நிலையில், தற்போது ஓடிடியில் வெற்றிநடைபோட்டுவருகிறது. இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இதற்கு முன் கேப்டன் மில்லர், சாணி காயிதம் மற்றும் ஆரண்ய காண்டம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தவர்.
இவரின் இயக்கத்தில் இறுதியாக வேல்;இயக்கையிருந்த டிசி படமானது எதிர்பாராத வரவேற்பை பெற்று, சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அண்மையில் நேர்காணல்; ஒன்றில் பேசியிருந்த இயக்குநர் அருண் மாதேஸ்வரன், டிசி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: விமானத்தில் ரஜினிகாந்தை சந்தித்த தருணம்… கயாடு லோஹர் சொன்ன விஷயம்!
டிசி திரைப்படம் குறித்து வெளிப்படையாக பேசிய இயக்குனர் அருண் மாதேஸ்வரன்:
அந்த பேட்டியில் பேசியிருந்த அருண் மாதேஸ்வரன், “DC தான் எனது முதல் படமாக இருக்க விரும்பினேன். ஆரண்ய காண்டம் படத்தை முடித்த பிறகு, நான் அதை எழுதத் தொடங்கினேன். தேவதாஸின் பல்வேறு பதிப்புகள் உள்ளன, இதுவும் அவற்றில் ஒன்று. Dev.D படத்தை பார்த்த பிறகு எனக்கு இந்த யோசனை வந்தது, பின்னர் நான் எனது சொந்த தேவதாஸ் கதாபாத்திரத்தை உருவாக்கி, கதையை ஒரு ஆக்ஷன் உலகில் அமைத்தேன்.
இதையும் படிங்க: ஹாய் படத்தின் சக்சஸ் மீட்டில் கலகலப்பாக பேசிய கவின்… வைரலாகும் வீடியோ
இந்தப் படத்தில் ஒரு காதல் கதையும் உள்ளது, எனவே இது எனது முதல் படமாக நன்றாக இருக்கும் என்று உணர்ந்தேன். ஆனால் அப்போதே, இது ஒரு சென்ஸார்ப் படமாக இருக்கும் என்றும், எந்தத் தயாரிப்பாளரும் இதைத் தயாரிக்க முன்வரவில்லை என்றும் எனக்குத் தெரியும்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பேசியதாக இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு:
Dir #ArunMatheswaran about When he started Writing #DC
– DC was supposed to be my first film. After finishing Aaranya Kaandam, I started writing it. There are various versions of #Devadas, and this is one of those versions.
– I got the idea after watching Dev.D, I then created… pic.twitter.com/vnDYSHUKD3
— Movie Tamil (@_MovieTamil) September 3, 2026
லோகேஷ் கனகராஜின் டிசி படமானது திரையரங்கு வெற்றியை தொடர்ந்து, தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிவருகிறது. இந்த படமானது அனிருத்தின் இசையில் சிறப்பாக அமைந்த நிலையில், ரூ 100 வசூல் செய்து ஹிட் கொடுத்த படமாக அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.