AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து முதியவர் பரிதாப மரணம் – கும்பகோணத்தில் சோகம்

Stray Dogs Attack Elderly Man : கும்பகோணம் அருகே 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் பரிதாபமாக உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் நடந்து சென்றவரை சூழந்துகொண்டு தெரு நாய்கள் கடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து முதியவர் பரிதாப மரணம் – கும்பகோணத்தில் சோகம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Sep 2026 20:08 PM IST

கும்பகோணம், செப்டம்பர் 3 : கும்பகோணம் அருகே 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் பரிதாபமாக உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே பாலகரை என்ற பகுதியில் சின்னதுரை என்ற முதியவர் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அவரை சூழந்துகொண்டு கடிக்கத் தொடங்கின. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லை என கூறப்படுகிறது.

10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கடித்து முதியவர் பரிதாப மரணம்

இந்த நிலையில் வயதானவர் என்பதால் அந்த இடத்தில் இருந்து விரைவாக ஓடமுடியாமல் தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த நிலையில் கீழே விழுந்த அவரை தெருநாய்கள் கடித்து குதறியுள்ளன. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அச்சத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : தமிழக காவல் துறை ரூ.212 கோடியில் நவீன மயமாக்குதல்.. ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள்.. முதல்வர் விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்!

தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் தெருநாய்களை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக கும்பகோணம் நகராட்சியிலும் அப்பகுதி மக்கள் புகாரளித்துள்ளனர். தெருநாய்களின் தொல்லையால் விபத்துகளும் உயிரிழப்புகளும் நிலையில் உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இதுகுறித்து தொடர்ச்சியாக கவலை தெரிவித்து வருகின்றன.

இதுதொடர்பான வழக்கு ஒன்றில் கடந்த 2026 ஜூலை மாதம் தெருநாய் பிரச்சினையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது. முன்னதாக உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு பொது இடங்களில் இனப்பெருக்க கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்காக பிடிக்கப்படும் நாய்களை மீண்டும் அதே பகுதிகளில் விடாமல், பராமரிப்பு மையங்களுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இதையும் படிக்க : அடுத்த 4 நாட்களுக்கும் 4 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் எச்சரிக்கை

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் போதுமான இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை ஏற்படுத்த வேண்டும், தடுப்பூசி மையங்களில் போதுமான கால்நடை மருத்துவர்கள், ஊழியர்களை நியமிக்க வேண்டும், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து உயர்நீதிமன்றத்திலும் இந்த வழக்கு தானாக விவாதத்துக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், தெருநாய்கள் பிரச்னையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என்றும், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசுக்கு தெரிவித்திருந்தது.

 

Follow Us