காரில் சடலமாக கிடந்த கணவன்.. கள்ளக்காதலன்,மகனுடன் சேர்ந்த தீர்த்துக்கட்டிய பாசக்கார மனைவி.. சேலத்தில் பயங்கரம்!
Salem Murder : சேலம் மாவட்டத்தில் கணவரை கொலை கொலை செய்ததாக அவரது மனைவி, 13 வயது மகன் மற்று ம் கள்ளக்காதலன் ஆகிய மூன்று பேரை ஒமலூர் போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைகளில் அடைத்தனர் .
சேலம் மாவட்டம், ஓமலூர்- சங்ககிரி சாலையில் கார் ஒன்று தனியாக நின்று கொண்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று காரை திறந்து பார்த்தனர். அப்போது, ஒரு ஆண் நபர் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனே, அவரது சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கொலை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்டது ஆஸ் பிரிக்ஸ் அதிபர் பூபதி என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அவரது மனைவி சுஜிதா ஸ்ரீ-யிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியது.
மனைவியின் கண்ணீருக்கு பின்னால் இருந்த கொடூர புத்தி
இதில், தனது கணவர் பூபதியை 3 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து தனது நகையை பறித்து சென்று விட்டதாக சுஜிதா ஸ்ரீ தெரிவித்தார். ஆனால், பூபதியின் உறவினர்கள் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்ததன் அடிப்படையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், சுஜிதா ஸ்ரீ யின் அழுகைக்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சிகரமான உண்மையை ஓமலூர் போலீசார் அதிரடியாக கண்டுபிடித்தனர். அதில், பூபதி மற்றும் சுஜிதா ஸ்ரீ இடையே அடிக்கடி குடும்பத்த தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சுஜிதா ஸ்ரீக்கு வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.
மேலும் படிக்க: தடுப்புகளை மீறி பாய்ந்த குடும்பம்.. முதல்வர் விஜய்யின் வாகனத்தை மறித்து போராட்டம்.. பெரும் பரபரப்பு!
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி
இதனை, அவரது கணவர் பூபதி கண்டித்துள்ளார். ஆனால், அதனை கேட்காத சுஜிதா தனது கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளார். இதன் காரணமாகவும், தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கணவர் பூபதியை தீர்த்து கட்டுவதற்கு சுஜிதா ஸ்ரீ திட்டமிட்டுள்ளார். அதன்படி, தனது கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜ் மற்றும் தனது 13 வயது மகனுடன் சேர்ந்து பூபதியை வீட்டிலேயே வெட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர், அவரது சடலத்தை காரில் ஏற்றி சென்று சினிமா பாணியில் வழிப்பறி நிகழ்ந்ததாகவும், அப்போது தனது கணவரை கொலை செய்து விட்டதாகவும் சுஜிதா ஸ்ரீ நாடகம் ஆடி உள்ளார்.
3 பேர் கைது – சிறைகளில் அடைப்பு
இதை தொடர்ந்து, சுஜிதா ஸ்ரீ, அவரது கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜ், 13 வயது மகன் ஆகிய 3 பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சுஜிதா ஸ்ரீ சேலம் மத்திய மகளிர் சிறையிலும், சந்தோஷ் ராஜ் மத்திய சிறையிலும், சிறுவன் சீர்திருத்த பள்ளியிலும் படைக்கப்பட்டனர்.
மேலும் படிக்க: நாமக்கல்லில் கொடூர சாலை விபத்து.. ஒரே நேரத்தில் 4 மாணவிகள் பரிதாப பலி!