அடுத்த 4 நாட்களுக்கும் 4 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பம் – வானிலை மையம் எச்சரிக்கை
Tamil Nadu weather today : தமிழ்நாட்டில் சில பகுதிகளில் செப்டம்பர் 3, 2026 இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செப்டம்பர் 3 : உள் தமிழ்நாட்டில் சில பகுதிகளில் செப்டம்பர் 3, 2026 இன்று முதல் 4 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் செப்டம்பர் 4, 2026 நாளை முதல் 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
அடுத்த4 நாட்களுக்கும் 4 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பம்
தமிழகத்தை பொறுத்த வரை செப்டம்பர் 3, 2026 இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுவதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க : “யாரும் ஓடிப் போகக் கூடாது.. திங்கட்கிழமை பதில் சொல்றேன்!”.. உதயநிதிக்கு சவால் விடுத்த முதல்வர் விஜய்!!




இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4, 2026 நாளை முதல் 3 நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்தமிழக பகுதிகளில் 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை செப்டம்பர் 3, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27–28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “116 நாளில் ரிவர்ஸ் கியரில் தமிழ்நாடு”.. கர்ஜித்து கேள்வி கேட்ட உதயநிதி.. கொந்தளித்த அமைச்சர் ஆனந்த்!!
மேலும் ஆகஸ்ட் 03, 2026 முதல் செப்டம்பர் 06, 2026 வரை தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என்றும் தமிழகத்தில் உள் பகுதிகளில் சற்று உயரக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல செப்டம்பர் 03, 2026 முதல் செப்டம்பர் 06, 2026 வரை தமிழகத்தின் உட் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.