AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வட உள் தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. மழைக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்?

Tamil Nadu Weather Update: சென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

வட உள் தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. மழைக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Aug 2026 06:25 AM IST

ஆகஸ்ட் 27, 2026: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மிதமான மழை பெய்து வந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 38.5° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38.3° செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 38° செல்சியஸ், மதுரையில் 38° செல்சியஸ், கடலூரில் 37.2° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வட உள் தமிழகத்தில் அதிகரிக்கும் வெப்பநிலை:

சென்னையைப் பொறுத்தவரை, மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 36.7° செல்சியஸ் வெப்பநிலையும், நுங்கம்பாக்கத்தில் 36.6° செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

வரும் நாட்களில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனினும், வட உள் தமிழகத்தில் வெப்பநிலையின் தாக்கம் சற்று அதிகரிக்கக்கூடும். ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3° செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சோபா செட் இல்லை… லாக்கரே வந்தாலும் தேமுதிக முடிவு மாறாது பிரேமலதா ஓபன் டாக்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடரும் மழை:

இதற்கிடையே, தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (ஆகஸ்ட் 27) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க: முதல்வர் விஜய் புகைப்படம் வாங்கியதிலேயே ஊழலா? மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

ஆகஸ்ட் 28 முதல் 30-ம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 1-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Follow Us