AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

2027 உலகக்கோப்பை: ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு இல்லையா? பிசிசிஐ கூட்டத்தில் நடந்தது என்ன?

BCCI Split Over Rohit Sharma : வருகிற 2027 உலகக்கோப்பை தொடர் குறித்து செப்டம்பர் 3, 2026 இன்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்து விவாதம் நடைபெற்றததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக சீனியர் வீரர்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.

2027 உலகக்கோப்பை: ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு இல்லையா? பிசிசிஐ கூட்டத்தில் நடந்தது என்ன?
ரோகித் சர்மா
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Sep 2026 19:02 PM IST

வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பைக்கைகான முக்கிய முடிவுகளை எடுக்க தேவாஜித் சைகியா தலைமையில் பிசிபிசிஐ கூட்டம் செப்டம்பர் 3, 2026 இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், டி20 கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்களான ஆர்பி சிங் மற்றும் ஓஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு இல்லையா?

இந்த கூட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் எதிர்காலம் குறித்த விவாதம் நடைபெற்றதாகத் தெரிகிறது. வருகிற 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் குழப்பம் நீடிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரோஹித் சர்மாவைத் தக்கவைப்பதா அல்லது இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பளிப்பதா என்பதில் அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக் குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : ICC Ranking: டெஸ்ட் தரவரிசையில் சரிந்த பும்ரா, கில்.. படிக்கல் முன்னேற்றம்!

இது தொடர்பாக வெளியான தகவல்களின்படி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலைச் சேர்ப்பது குறித்துப் பரிசீலித்து வருகின்றனர். இளம் வீரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதையும், எதிர்காலத்திற்காக அணியை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக ஜெய்ஸ்வாலைக் கொண்டுவருவதற்கான முன்மொழிவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரோகித் சர்மாவுக்கு பெருகும் ஆதரவு

மறுபுறம், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் பிரிவின் தலைவருமான விவிஎஸ் லக்ஷ்மன், இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் தற்போதைய கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ரோகித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. வருகிற 2027 உலகக் கோப்பைக்கான அணியில் ரோகித் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் இருப்பது இந்தியாவுக்குப் பயனளிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
சர்வதேச போட்டிகளில் அவரது அனுபவம், முக்கியத் தொடர்களில் அழுத்தத்தைக் கையாளும் திறன் மற்றும் முக்கியமான போட்டிகளில் அவரது செயல்பாடு ஆகியவை அணிக்கு மதிப்புமிக்க சொத்துகளாகக் கருதப்படுகின்றன.

இதையும் படிக்க : Womens Champions Trophy: ஐசிசி கொடுத்த ட்விஸ்ட்! சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா!

உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் கலந்த ஒரு அணியின் தேவை குறித்து அவர்கள் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து எப்போது விடைபெறுவது என்பது குறித்த முடிவு முழுமையாக ரோஹித் சர்மாவின் கையிலேயே உள்ளது. 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான திட்டங்களில் ரோகித்தை இடம்பெறச் செய்வதற்கான ஆதரவு தற்போது அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இது இந்திய கிரிக்கெட்டில் அவரது எதிர்காலம் குறித்த புதிய ஆர்வத்தையும் விவாதங்களையும் தூண்டியுள்ளது. வருகிற 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் ரோஹித் விளையாட வேண்டுமா என்பது குறித்து, பிசிசிஐ மற்றும் இந்திய கிரிக்கெட் உலகின் முக்கியப் பிரமுகர்கள் முரண்பட்ட கருத்துகளுடன் இரு வேறு அணிகளாகப் பிரிந்திருப்பது சுவாரஸ்யமான ஒரு சூழலை உருவாக்கியுள்ளது.

Follow Us