நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – கடுமையான எச்சரிக்கை கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On NEET : என்டிஏ நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களின் எதிர்காலம் பாழாவதை அனுமதிக்க மாட்டேன் என்று அவர் கூறினார். நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை அன்று, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும் இதில் கலந்துகொண்டார். கூட்டத்தின் போது, நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக அவர் ஒரு முக்கிய விஷயத்தை குறிப்பிட்டதாக கிரண் ரிஜிஜு தெரிவித்தார் . மாணவர்களின் எதிர்காலம் பாழாவதை அனுமதிக்க மாட்டேன் என்றும், வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பானவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் பிரதமர் எச்சரிக்கை கொடுத்ததாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர் சந்திப்பில் இதை அறிவித்தார்.
கூட்டத்தில் பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக ரிஜிஜு கூறினார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக, பிரதமர் மோடி கடுமை, தண்டனை மற்றும் பிழையற்ற ஒரு முறையை வலியுறுத்தினார். அரசு மாணவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மறுதேர்வுகள் நடத்தப்பட்டன, மேலும் முடிவுகள் வெளியாவதில் எந்தத் தாமதமும் ஏற்படவில்லை. மேலும் வினாத்தாள் கசிவுகளைத் தடுக்கக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்
நீட் விவகாரத்தில் கட்சி அரசியல் இருக்கக்கூடாது.
குற்றம் சாட்டப்பட்டவருக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இது ஒரு மாநிலப் பிரச்சினை மட்டுமல்ல, தேசியப் பிரச்சினையாகும். இந்த விஷயத்தில் கட்சி அரசியலுக்கு இடமில்லை. மேலும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. விவசாயிகளின் நலன்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றும், எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி வழிகாட்டுதல்களை வழங்கியதோடு, கடந்த சில மாதங்களில் நாடு அடைந்த வெற்றிகளையும் எடுத்துரைத்ததாக ரிஜிஜு கூறினார்.