ராகுல் காந்தி- பிரியங்கா காந்தி அதிரடி கைது! டெல்லியில் பெரும் பரபரப்பு!
Rahul Gandhi- Priyanka Gandhi Arrested: டெல்லியில் இளைஞர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி எம் பி ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி வீட்டின் அருகே நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி எம்பி, அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்.பி. க்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில் பெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோரை அதி விரைவு படையினர் மற்றும் போலீசார் அவர்களை அதிரடியாக கைது செய்து காவல்துறை வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றி சென்றனர். இதனால், டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், பிரதமர் வீட்டை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வளையத்தை மீறி இந்த போராட்டம் எப்படி நிகழ்ந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரகசிய திட்டமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி
இதில், போராட்டம் நடைபெறும் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிரியங்கா காந்தி எம்பி, காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளிட்டோர் வாகனங்களில் வந்துள்ளனர். அவர்கள் திடீரென இந்த போராட்டத்தில் பங்கேற்று மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் கொண்டாட்டம் என கூறப்பட்ட நிலையில், பிரதமர் வீட்டின் அருகே மாபெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2வது நாள் – வந்தே மாதரம் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
பிரதமர், உள்துறை அமைச்சர் பதவி விலக கோரி
டெல்லியில் நீட் தேர்வு முறைகேடு உள்ளிட்ட காரணங்களுக்காக காக்ரோச் ஜனதா பார்ட்டியின் தலைவர் அபிஜித் தீப்தி உள்ளிட்டோர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர் வாங்சுக் என்பவரும் போராட்டத்தை முன்னெடுத்தார்.
ராகுல் காந்தியுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை
இந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்ற நிலையில், பாதுகாப்பு படையினர் மேற்கண்ட நடவடிக்கையை எடுத்துள்ளனர். முன்னதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் – கடுமையான எச்சரிக்கை கொடுத்த பிரதமர் மோடி