நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 2வது நாள் – வந்தே மாதரம் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
புதுடெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 2வது நாளான ஜூலை 21, 2026 இன்று வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை குற்றமாக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த மசோதா கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
புதுடெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவையும், மாநிலங்களவையும் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 21, 2026 இன்று முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொள்கிறது. குறிப்பாக ஜூலை 21, 2026 இன்று வந்தே மாதரம் பாடலை அவமதிப்பதை குற்றமாக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த மசோதா கூட்டத்தொடரின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.
வந்தே மாதரம் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம்
தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்படும் அரசு நிகழ்ச்சிகளில், தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ இசைக்கப்படுவதை அல்லது பாடுவதை கட்டாயமாக்கி மத் திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது.
இதையும் படிக்க : இந்தியா கூட்டணி கூட்டத்தைப் புறக்கணித்த திமுக.. நாடாளுமன்றத்தில் எம்பிக்களின் இருக்கைகள் அதிரடி மாற்றம்!!




இதனையடுத்து தேசிய பாடலான வந்தே மாதரத்தை அவமதிப்பது அல்லது அந்தப் பாடல் பாடப்படும்போது இடையூறு செய்வதை தண்டனைக்குரிய குற்றமாக்கும் மசோதாவை, மாநிலங்களவையில் மத்திய அரசு ஜூலை 21, 2026 இன்று தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின்படி தேசிய கொடி, அரசமைப்புச் சட்டம், தேசிய கீதம் ஆகியவற்றை சேதப்படுத்தினால் அல்லது அவமதித்தால், 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என கூறப்படுகிறது.
இதே சட்ட பாதுகாப்பை வந்தே மாதரம் பாடலுக்கும் அளிக்கும் நோக்கில், தேசிய கௌரவம் அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026-ஐ, நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 21, 2026 இன்று தாக்கல் செய்ய உள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது; இது ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜூலை 21, 2026 இன்று அவையில் பல முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. குறிப்பாக, ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்கி, அதற்காக மூன்றாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் வகையிலான மசோதா அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதையும் படிக்க : போரினால் ஏற்படும் இழப்பு.. எண்ணெய் விலைகள்.. பிரதமர் மோடியின் முக்கியக் கருத்துகள்
மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34லிருந்து 38-ஆக உயர்த்திய அவசரச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு புதிய மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பானவை உள்ளிட்ட பிற முக்கிய மசோதாக்களையும் மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, மழைக்காலக் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தியதுடன், நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.