சட்டவிரோதமாக செயல்பட்டதாக மிரட்டிய கும்பல்.. இளம் பெண்ணை ஏமாற்றி ரூ.73 லட்சம் மோசடி.. பகீர் சம்பவம்!
Woman Lost 73 Lakhs in Cyber Scam | இந்தியாவில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டு பயன்படுத்தி சிம் கார்டு வாங்கி மோசடி செய்தாத கூறி இளம் பெண்ணிடம் இருந்து ரூ.73 லட்சம் பணம் பறிக்கப்பட்டுள்ளது.

திருபனந்தபுரம், செப்டம்பர் 28 : கேரளாவை (Kerala) சேர்ந்த இளம் பெண்ணை ஏமாற்றி அவரிடம் இருந்து மோசடி கும்பல ரூ.73 லட்சம் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதார் கார்டை பயன்படுத்தி சிம் கார்டு எடுத்து சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக அந்த பெண்ணை மிரட்டிய கும்பல் அவரிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. இந்த மோசடி சம்பவம் குறித்தும், இளம் பெண் ரூ.73 லட்சம் பணத்தை இழந்தது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
இளம் பெண்ணிடம் ரூ.73 லட்சம் கொள்ளை – மோசடி கும்பல் கைவரிசை
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அழைப்பு வந்துள்ளது. எதிர் பக்கத்தில் இருந்து பேசிய நபர், தனியார் டெலிகாம் நிறுவன அலுவலகத்தில் ஆதார் கார்டை பயன்படுத்தி சிம் கார்டு எடுத்து சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தி தகவல்கள் அனுப்பியுள்ளீர்கள். இது தொடர்பாக மராட்டிய போலீசார் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : ஐயோ.. கொதிக்கும் பாலில் தவறி விழுந்த குழந்தை.. பறிபோன பிஞ்சு உயிர்!




வழக்கில் இருந்து விடுவிக்க பணம் கேட்டு மிரட்டிய கும்பல்
மர்ம நபர் பேசியதை கேட்டு அந்த இளம் பெண் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். அதனை அறிந்துக்கொண்ட அந்த கும்பல் இளம் பெண்ணிடம் இருந்து பணத்தை பறிக்க சதி திட்டம் தீட்டியுள்ளது. அதாவது வழக்கில் இருந்து விடுபட வேண்டும் என்றால் குறிப்பிட்ட வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளனர். அதன்படி அந்த இளம் பெண்ணும் ஆகஸ்ட் 20, 2025 முதல் செப்டம்பர் 12, 2025 வரை பல தவணைகளாக ரூ.73 லட்சம் பணத்தை மோசடி கும்பலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதையும் படிங்க : இளைஞர் வயிற்றில் 29 கரண்டிகள், 19 பிரஷ்கள்.. மருத்துவர்களையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய பகீர் சம்பவம்!
இளம் பெண் மோசடி கும்பல் சொன்னதை கேட்டு பணத்தை அனுப்பிய நிலையில், தனக்கு பணம் திரும்ப கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புரிந்துக்கொண்டுள்ளார். இந்த நிலையில், தனது பகுதியில் உள்ள சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் இந்த மோசடி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாள்தோறும் இத்தகைய மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.