Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சிக்கன் கறி கேட்ட சிறுவன்.. தாய் செய்த கொடூரம்.. பறிபோன உயிர்!

Maharashtra Crime News : மகாராஷ்ராவில் சிக்கன் கறி கேட்ட 7 வயது சிறுவனை தாய் அடித்தே கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிக்கன் கறியை சிறுவன் தொடர்ந்து கேட்டதால், ஆத்திரம் அடைந்த தாய் சப்பாத்தி கட்டையால் அடித்தே கொன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிக்கன் கறி கேட்ட சிறுவன்.. தாய் செய்த கொடூரம்.. பறிபோன உயிர்!
கைதான பெண்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 30 Sep 2025 08:01 AM IST

மகாராஷ்டிரா, செப்டம்பர் 30 : மகாராஷ்டிராவில் கோழிக்கறி கேட்ட 7 வயது மகனை தாய் அடித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கறி கேட்டதால், சப்பாத்தி கட்டையால் 7 வயது மகனை தாய் அடித்துள்ளார். இதில் சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து தாய் கைதாகி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெண் பல்லவி தும்டே (40). இவர் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் மகள் மற்றும் 7 வயது மகன் உள்ளார். 7 வயது மகன் சின்மய தும்டே சம்பவத்தன்று சிறுவன் தனது தாயாரிடம் கோழிக்கறி சமைத்து தருமாறு கேட்டிருக்கிறார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இருப்பினும், 7 வயது சிறுவன் தொடர்ந்து தாயிடம் கோழிக்கறி கேட்டிருக்கிறார்.

இதனால் கோபமடைந்த தாய் பல்லவி தும்டே வீட்டில் இருந்த சப்பாத்தி கட்டையால் சிறுவனை தலை மற்றும் உடலில் கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் சிறுவன் தலையில் இருந்து ரத்தம் வடிந்துள்ளது. இதனால், சிறுவன் அலறி துடித்துள்ளார். இருப்பினும், இரக்கம் காட்டாத தாய், மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை. சிறுவனின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், உடனே சிறுவனை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, போலீசார் பெண் பல்லவி தும்டேவை கைது செய்தனர்.

Also Read : கணவருடன் நவராத்திரி நடனம்.. இளம்பெண் மாரடைப்பால் பலி

சிக்கன் கேட்ட சிறுவனை கொன்ற தாய்

இதுகுறித்து பேசிய எஸ்பி தேஷ்முக், ” குற்றம் சாட்டப்பட்ட தாய் காவலில் எடுக்கப்பட்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யதீஷ் தேஷ்முக் கூறுகையில், பல்லவி தனது குடும்பத்துடன் காஷிபாடா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது மகன் சின்மய் கணேஷ் சப்பாத்தி கட்டையால் தாக்கப்பட்டதில் அவர் உயிரிழந்தார். சிக்கன் கறி கேட்டதால்,  மகனை தாய் அடித்து கொன்றது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Also Read : இன்று தொடங்கும் 3 புதிய அம்ரித் பாரத் ரயில்கள்.. எந்த வழித்தடம்? முழு விவரம்..

அவரது 10 வயது மகளும் தாக்கப்பட்டார். பால்கர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பால்கர் காவல்துறையினர் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என்றார். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மற்றொரு சம்பவத்தில், உத்தரபிரதேசத்தின் கன்னோஜில் நடந்த திருமண விருந்தில் கூடுதலாக சிக்கன் கேட்டதற்காக 15 வயது சிறுவன் கொல்லப்பட்டார்.