கணவருடன் நவராத்திரி நடனம்.. இளம்பெண் மாரடைப்பால் பலி
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் நவராத்திரி விழாவின் போது கர்பா நடனமாடிய 19 வயது இளம் பெண் மாரடைப்பால் உயிரிழந்தார். கணவருடன் ஆடிக்கொண்டிருந்த சோனம் என்ற பெண் திடீரென மயங்கி விழுந்தார். இளம் வயதில் மாரடைப்பு அதிகரிப்பது மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேசம், செப்டம்பர் 30: மத்தியப்பிரதேச மாநிலம் கார்கோனில் கோயில் ஒன்றில் நடனமாடி கொண்டிருந்த இளம்பெண் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு வீடுகள், கோயில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் களைகட்டியுள்ளது. ஒவ்வொரு மாநில மக்களும் நவராத்திரி கொண்டாட்டத்தின் போது தங்களின் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ந்து வருகின்றனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ
खरगोन : दुर्गा पंडाल में गरबा खेलने के दौरान महिला को आया हार्ट अटैक, महिला की मौत#heartattacks pic.twitter.com/76Ud0M2xDD
— Raajeev Chopra (@Raajeev_Chopra) September 29, 2025
இப்படியான நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் உள்ள துர்கா கோவிலில் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது ஒரு இளம் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவில் கோவிலில் உயிரிழந்த அந்த பெண் தனது கணவருடன் நடனமாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அப்போது அவர் திடீரென தரையில் மயங்கி விழுந்தார். முதலில் தவறி விழுந்ததாக அனைவரும் நினைத்த நிலையில் அப்பெண்ணிடம் இருந்து சில நொடிகளில் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்ததைக் கண்டு கணவன் ஓடிப்போய் பார்க்கிறார்.




இதையும் படிங்க: புதுமாப்பிள்ளை மாரடைப்பால் பலி.. மனைவியுடன் தியேட்டரில் படம் பார்த்தபோது நடந்த சம்பவம்!
பின்னர் மூச்சு பேச்சு இல்லாமல் இருப்பதைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். மரணித்த அந்த பெண்ணுக்கு 19 வயது தான் ஆகிறது என்பது மிகப்பெரிய சோகமான செய்தியாகும். சமீபத்தில் தான் அவருக்கு திருமணமும் நடந்துள்ளது. கணவன், மனைவி இருவரும் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் சந்தோஷத்தை வெளிப்படுத்த நடனமாடிய போது இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதிகரிக்கும் இளம் வயது மரணங்கள்
இதுதொடர்பாக போலீசார் அளித்த தகவலின்படி, மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் உள்ள பிகாங்கான் தாலுகாவின் பலாசி கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு துர்கா கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) இரவு இந்த சோகம் நடந்ததாகக் கூறப்படுகிறது.சோனம் என்ற அந்த 19 வயது பெண் தனது கணவர் கிருஷ்ணபாலுடன் துர்க்கை அம்மன் சிலை முன்னால் கர்பா நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். ‘ஓ மேரே தோல்னா’ பாடலுக்கு தம்பதியினர் நடனமாடிக் கொண்டிருந்தபோது, சோனம் திடீரென தரையில் விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அங்கு வருகை தந்தவர்கள் ஆரம்பத்தில் அவரது விழுந்தது நடன நிகழ்ச்சியின் ஒரு பகுதி என்று நினைத்து ரசித்து பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: Perambalur: கணவர் மரணம்.. துக்கம் தாங்காமல் மனைவி, குழந்தையுடன் தற்கொலை
ஆனால் அவள் அசையாமல் இருந்தபோது தான் ஏதோ விபரீதம் நிகழ்ந்துள்ளது கூட்டத்தினருக்கு புரிந்துள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் பரவியது. உயிரிழப்புக்கு முன்பும் கூட சோனத்திற்கு எந்த உடல்நலப் பிரச்சினைகளும் இருப்பதற்கான அறிகுறிகளும் இல்லாமல் இருந்துள்ளது. அவர் நடனம் கூட மிகவும் மகிழ்ச்சியாகவே ஆடிக் கொண்டிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் இளம் வயது மாரடைப்பு என்பது சமீப காலமாக அதிகரித்து கொண்டிருப்பது மக்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.