ஆறு பேரை வீட்டில் வைத்து தீ வைத்து கொளுத்திய விவசாயி.. மூட நம்பிக்கையின் உச்சத்தில் நடைபெற்ற சம்பவம்?
Farmer Set Fire on His Own Family | உத்தர பிரதேசத்தில் விவசாயி ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தனது பகுதியில் வசிக்கு இரண்டு குழந்தகளை வீட்டின் உள்ளே வைத்து பூட்டிக்கொண்டு வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஹ்ராய்ச், அக்டோபர் 02 : உத்த பிரதேசத்தில் (Uttar Pradesh) குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட ஆறு பேரை வீட்டில் வைத்து விவசாயி ஒருவர் கொளுத்திக்கொண்டு தீயில் கருகி பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நிலையில், முதற்கட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், விவசாயி தன்னுடன் சேர்த்து ஐந்து பேரை தீவை வைத்து கொளுத்தியது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆறு பேரை வீட்டில் வைத்து தீ வைத்த கொளுத்திய விவசாயி
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ராய்ச் மாவட்டத்தை சேர்ந்தவர் விவசாயி விஜய். இவர் சம்பவத்தன்று அந்த பகுதியை சேர்ந்த இரண்டு குழந்தைகளை வேலைக்காக தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அதனை நம்பி அந்த குழந்தைகள் சென்ற நிலையில், அவர்கள் இருவரையும் கோடாரி கொண்டு மிக கொடூரமாக தாக்கியுள்ளார். பின்னர் அந்த இரண்டு குழந்தைகள் தனது மனைவி, இரண்டு மகள்கள் என அனைவரையும் வீட்டிற்கு உள்ளே வைத்து பூட்டிக்கொண்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் உள்ளே இருந்தவாறு அவர் வீட்டை தீ வைத்து முழுவதுமாக கொளுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : துபாயில் இருந்து வந்ததும் இப்படியா? மனைவியை கொன்ற கணவர்.. ஷாக் பின்னணி!




6 பேர் உடல் கருகி பலியான சோகம்
வீடு தீப்பற்றி ஏரிவதை கண்டு அந்த பகுதி மக்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர். அது முடியாமல் போகவே காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தீயை அணைத்துள்ளனர். ஆனால், அதற்குள்ளாகவே வீட்டிற்குள் இருந்த அனைவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், எரிந்த வீட்டில் இருந்து விவசாயி விஜய், அவரது மனைவி, இரண்டு மகள்கள் மற்றும் அந்த பகுதி சிறுவர்கள் இரண்டு பேர் ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : சிக்கன் கறி கேட்ட சிறுவன்.. தாய் செய்த கொடூரம்.. பறிபோன உயிர்!
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதில் ஆறு பேரை வீட்டில் வைத்து எரித்த விவசாயிக்கு சற்று மூட நம்பிக்கை அதிகம் என அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில், மூட நம்பிக்கையின் காரணமாக விவசாயி அனைவரையும் கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.