Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் இருந்த பல்லி.. அசால்டாக பதில் சொன்ன வியாபாரி.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்!

7 Years Old Boy Found Lizard in Ice Cream | கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களின் சுகாதாரம் மற்றும் அவற்றின் தரம் குறித்து பெரிய கேள்வி உள்ளது. அந்த வகையில், பஞ்சாபில் சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் பல்லி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீமில் இருந்த பல்லி.. அசால்டாக பதில் சொன்ன வியாபாரி.. பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்!
ஐஸ் கிரீமில் இருந்த பல்லி
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 10 Jun 2025 09:26 AM

பஞ்சாப், ஜூன் 10 : பஞ்சாப்பில் (Punjab) சிறுவன் வாங்கி சாப்பிட்ட ஐஸ்கிரீமில் பல்லி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து ஐஸ்கிரீம் வியாபாரியிடம் அந்த பகுதி மக்கள் முறையிட்ட போது அவர், அவற்றை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தொடர்ந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீம் மாதிரியை சேகரித்து சோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள்

இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் ஐஸ்கிரீம்கள் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில், மருத்துவர் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார். அந்த ஐஸ்கிரீமை அவர் சாப்பிட்ட போது அதில் மனித கட்டை விரல் இருப்பதை கண்டு அவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதேபோல தாய்லாந்தில் ஒரு சம்பவம் நடைபெற்றது.

தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த சுற்றுலா பயணி ஒருவர் அங்கு மிகவும் பிரபலமான பிளாக் பீன் ஐஸ்கிரீமை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது, அந்த ஐஸ்கிரீமில் விஷ தன்மை கொண்ட இறந்துப்போன பாம்பு ஒன்று கிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இவ்வாறு தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது பஞ்சாபில் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஐஸ்கிரீமில் இருந்த பள்ளி – அதிர்ந்துப்போன சிறுவன்

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் 7 வயது சிறுவன் ஒருவன் சாலையோர தள்ளுவண்டி கடையில் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது தான் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ்கிரீமில் பள்ளி ஒன்று கிடந்ததை கண்ட சிறுவன் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அது குறித்து சிறுவன் தனது பாட்டியிடம் கூறிய நிலையில், அந்த பகுதி மக்கள் சிலர் ஐஸ்கிரீம் வியாபாரிடம் இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். ஆனால் அவர், அந்த ஐஸ்கிரீம் ஆலையில் இருந்து வந்ததாகவும் அதை தான் தயாரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி அவர் தொடர்ந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறந்த போலீசார், அது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறுவன் சாப்பிட்ட ஐஸ்கிரீம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். பல்லி இருந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டதால் உடனடியாக சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நலமுடன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...