AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kerala Ship Accident: கோழிக்காடு அருகே சரக்கு கப்பலில் தீ விபத்து – கடலில் குதித்த பணியாளர்கள்

Cargo Ship Explosion : கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே இலங்கையின் கொழும்புவிலிருந்து சரக்கு கப்பல் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. கப்பலில் 600க்கும் மேற்பட்ட கண்டெயினர்கள் இருந்திருக்கிறது. மேலும் கப்பலில் இருந்த 18 பணியாளர்கள் கடலில் குதித்து உயர் பிழைத்திருக்கின்றனர். கப்பலை தீ விபத்தில் இருந்து மீட்கும் பணிகளில் கடலோர காவல்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Kerala Ship Accident: கோழிக்காடு அருகே சரக்கு கப்பலில் தீ விபத்து – கடலில் குதித்த பணியாளர்கள்
கேரளா அருகே கப்பலில் தீ விபத்து
Karthikeyan S
Karthikeyan S | Published: 09 Jun 2025 15:06 PM IST

கோழிக்கோடு, ஜூன் 09 : கேரளா (Kerala) மாநிலம் கோழிக்கோடு (Kozhikode) கடற்கரை அருகே சரக்குக் கப்பலில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது.  இந்த கப்பல் இலங்கையில் (Sri Lanka) உள்ள கொழும்புவில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு சென்ற கப்பல் கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்தது. கப்பலில் இருந்த 18 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர். கப்பல் தீப்பிடித்ததை அறிந்த கடலோர காவல்படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கப்பலில் சுமார் 600க்கும் மேற்பட்ட கொல்கலன்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுவரை கப்பல் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. கப்பலில் உள்ள மற்றவர்களின் நிலை என் ஆனது என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரக்கு கப்பலில் இருந்து 50க்கும் மேற்பட்ட கொள்கலன்கள் கடலில் விழுந்து வீணாகியுள்ளது. சரக்கு கப்பலில் உள்ள பொருட்கள் குறித்து விரைவில் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்பலில் உள்ள 22 பணியாளர்களில், 18 பேர் படகில் இருந்து கடலில் குதித்து உயிர் தப்பியிருக்கின்றனர். மீதமுள்ள பணியாளர்களையும் பொருட்களையும் மீட்கும் முயற்சியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோழிக்காடு அருகே கப்பலில் தீ விபத்து

 

கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் வைத்து இந்த சரக்குக் கப்பல் தீப்பிடித்திருக்கிறது. இந்த தீ விபத்து சம்பவம் ஜூன் 9, 2025 அன்று காலை 10.30 மணியளவில் மும்பையில் உள்ள கடற்படை மெரிடைம் ஆபரேஷன்ஸ் மையத்தால் கண்டறியப்பட்டு, உடனடியாக கொச்சியில் உள்ள அவர்களது தொடர்பு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கப்பலில் சிங்கப்பூர் கொடி பறந்திருக்கிறது. இந்தக் கப்பல் ஜூன் 7, 2025  அன்று  இலங்கையின் கொழும்புவில் இருந்து ஜூன் 10, 2025  அன்று மும்பைக்கு சென்றடவதாக இருந்திருக்கிறது.

மேலும் 270 மீட்டர் நீளமும், 12.5 மீட்டர் ஆழமும் கொண்ட இந்தக் கப்பல் கொழும்பில் இருந்து பயணிக்கிறது. இந்த தகவலைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படை உடனடி நடவடிக்கையாக ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலை முன்னெச்சரிக்கையாக கொச்சிக்கு மாற்றி அனுப்பியிருக்கிறது. . இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும் பணிக்கு காலை 11 மணிக்கு மேற்கு கடற்படை கட்டளை மையம் உத்தரவு வழங்கியது.   இந்த வெடிப்பில் சுமார் 50 கண்டெயினர்கள் கடலில் விழுந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

Follow Us