AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வேகமெடுக்கும் கெரோனா.. 5 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.. தமிழகத்தில் எத்தனை?

India Covid Cases : நாட்டில் கொரோனா பாதிப்பு 5,000-ஐ கடந்துள்ளது. தற்போதை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்றால் 5,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகதாராத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் மட்டும் 1,684 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் 330 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேகமெடுக்கும் கெரோனா.. 5 ஆயிரத்தை கடந்த பாதிப்பு.. தமிழகத்தில் எத்தனை?
கொரோனா தொற்று
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 06 Jun 2025 12:56 PM IST

டெல்லி, ஜூன் 06 : நாட்டில் கொரோனா பாதிப்பு (india covid cases) 5,000-ஐ கடந்துள்ளது. தற்போதை நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா தொற்றால் 5,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகதாராத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2025 ஜூன் 5ஆம் தேதியான நேற்று 4,866ஆக கொரோனா பாதிப்பு இருந்தது. இந்த நிலையில், 2025  ஜூன் 6ஆம் தேதியான இன்று சராசரியாக 500 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால், மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,346 ஆக உயர்ந்ததுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 1,684 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 597 பேரும், கர்நாடகாவில் 451 பேரும், மேற்கு வங்கத்தில் 596 பேரும், உத்தர பிரதேசத்தில் 2025 பேரும், ராஜஸ்தானில் 107 பேரும், குஜராத்தில் 615 பேரும், டெல்லியில் 592 பேரும், ஆந்திராவில் 62 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025 ஜூன் 5ஆம் தேதியான நேற்று வரை 221 ஆக இருந்த நிலையில், தற்போது 330 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி,  இந்தியாவில் 2025 ஜனவரியில் இருந்து இதுரை 55 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அவற்றில் 53 பேர் கடந்த 15 நாட்களில் உயிரிழந்தனர். டெல்லி 2 பேரும், கேரளாவில் 2 பேரும், கர்நாடக, பஞ்சாபில் தலா ஒருவரும், மகாராஷ்டிராவில் 17 பேரும் உயிரிழந்துள்ளனர்.

2025 மே மாதத்தில் தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற ஆசிய நாடுகளில் பரவிய கொரோனா தொற்று, தற்போது இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. தற்போது இந்தியாவில்  4 புதிய வகை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அவை LF.7, XFG, JN.1 மற்றும் NB.1.8.1 தொடர்களைச் சேர்ந்தவை ஐசிஎம்ஆர்  தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயார் நிலையில் மருத்துவமனைகள்

 

இந்த வகையான கொரோனா தொற்றுகள் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. ஆனால், இந்த வகையான கொரோனா தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருந்தது.

இருப்பினும், அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. ஆக்ஸிஜன், படுக்கை வசதிகள், மருந்துகள், வென்டிலேட்டர் உள்ளிட்டவற்றை கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதனை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது கொரோனா பாதிப்பு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us