Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கொரோனாவின் இந்த மோசமான அறிகுறிகள் தற்போது இல்லை – காரணம் என்ன?

Corona Symptoms : இந்தியாவில் கொரோனா தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கியிருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில்ல கொரோனா இந்தியாவில் பரவத் துவங்கிய போது சுவை மற்றும் மணம் இழக்கும் அறிகுறிகளை பலரும் எதிர்கொண்டனர். இதற்கு உண்மையான காரணம் என்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கொரோனாவின் இந்த மோசமான அறிகுறிகள் தற்போது இல்லை – காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 31 May 2025 09:09 AM

இந்தியாவில் கொரோனா (Corona) தொற்று வேகமாக அதிகரித்து வருகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா முதன்முதலில் உலகைத் தாக்கியபோது, ​பல அறிகுறிகள் காணப்பட்டன. இந்த அறிகுறிகளில் சில மிகவும் பொதுவானவை என்பதால் மக்களால் அவற்றை  எளிதில் அடையாளம் காணக்கூட முடியவில்லை, அதே நேரத்தில் சில அறிகுறிகள் மிகவும் கடுமையார இருந்தன. கொரோனா இரண்டாவது அலையின் போது இந்தியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர். அப்போது கொரோனா பாதித்தவர்களுக்கு ஏற்பட்ட அறிகுறிகளில் ஒன்று சுவை மற்றும் வாசனை இழப்பு. அதாவது, பாதிக்கப்பட்ட நபரால் உணவை ருசிக்கவோ அல்லது அதன் வாசனையை உணரவோ முடியாது. ஆனால் இப்போது, ​​விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கொரோனாவின் புதிய மாறுபாட்டில் இந்த அறிகுறிகள் அரிதாகவே காணப்படுவதைக் கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஜுகல் கிஷோர் என்ற மருத்துவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த அறிகுறிகள் ஏன் ஏற்பட்டது?

மருத்துவ நிபுணர் டாக்டர் ஜுகல் கிஷோர் கூறுகையில், சுவை மற்றும் மணம் தெரியாமல் இருக்கும் அறிகுறிகள் தற்போது மறைந்துவிட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா நோயாளிகளிடம் இந்த அறிகுறிகள் காணப்படவில்லை. கொரோனா வைரஸின் ஆரம்ப மாறுபாடுகள் முதலில் நமது உடலின் மூக்கு மற்றும் தொண்டையின் செல்களைப் பாதித்தன. இந்த வைரஸ் மூக்கின் உட்பகுதியை சேதப்படுத்தியது, இதனால் நோயாளிகள் வாசனை உணர முடியாமல் போனது. இதேபோல், சுவை உணரும் திறனும் குறைந்தது, ஏனெனில் இந்த வைரஸ் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தையும் பாதித்தது.

ஓமிக்ரான் மூலம் ஏற்பட்ட மாற்றம்

ஓமிக்ரான் மாறுபாடு வந்தபோது, ​​வைரஸின் செயல்பாடுகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஜுகல் கிஷோர் தெரிவித்தார். தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் ஓமிக்ரான் பாதிப்பு குறைவாகவும்,  சுவாசக் குழாயில் அதிகமாகவும் செயல்படுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக, முன்பு போல மூக்கின் உள்ளே வாசனை தொடர்பான நரம்புகளைப் பாதிக்காது. இதனால்தான் ஓமிக்ரான் மற்றும் அதன் அடுத்தடுத்த வகைகளில் சுவை மற்றும் மணம் இழப்பு அரிதாகவே காணப்படுகிறது.

தடுப்பூசியினால் ஏற்பட்ட மாற்றம்

மற்றொரு பெரிய காரணம் தடுப்பூசி. தடுப்பூசி போடப்பட்டவர்களின் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக வைரஸ் உடலில் அதிகமாகப் பரவாது, மேலும் அறிகுறிகள் குறைவாகவே இருக்கும். இது சுவை மற்றும் மணத்தை பாதிக்க வாய்ப்பளிக்காது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வுகளில், கொரோனா நோயாளிகளில் 90 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் சுவை அல்லது வாசனையை இழக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை முந்தையதை விட மிகவும் குறைவு. இதன் பொருள் வைரஸின் வலிமை குறையவில்லை என்றாலும், அதன் முறை மாறிவிட்டது.

புதிய வகைகளில் வெவ்வேறு அறிகுறிகள்

சுவையை இழப்பது போன்ற அறிகுறிகள் தற்போது இல்லை, ஆனால் கொரோனா வைரஸ் இனி ஆபத்தானது அல்ல என்று அர்த்தம் கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். சில புதிய வகைகளில், காய்ச்சல், தலைவலி, இருமல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் இன்னும் கடுமையாக இருக்கலாம். எனவே, எச்சரிக்கையும் விழிப்புணர்வும் இன்னும் அவசியம் என அவர்கள் தெரிவிக்கன்றனர்.