AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தீயாய் பரவும் கொரோனா வைரஸ்.. 1000-ஐ தாண்டிய பாதிப்பு.. தமிழகத்தில் நிலை என்ன?

Covid Cases India : இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,009 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 752 ஆக கொரோனா பாதிப்புகள் இருந்த நிலையில், தற்போது 1,000-ஐ தாண்டியுள்ளது. இதில், கேரள மாநிலத்தில் மட்டும் 430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீயாய் பரவும் கொரோனா வைரஸ்.. 1000-ஐ தாண்டிய பாதிப்பு.. தமிழகத்தில் நிலை என்ன?
கொரோனா வைரஸ்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 27 May 2025 12:03 PM IST

டெல்லி, மே 27 : நாட்டில் கொரோனா பாதிப்பு (covid cases india) அதிகரித்து வருகிறது. இதுவரை 1,009 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கேரள மாநிலத்தில் தான் கொரோனா தொற்றால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2019ஆம் ஆண்டு சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா, உலக நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை கொரோனா தொற்றால் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டனர். கொரோனா தொற்றால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனால் உலக நாடுகளில் கடும் கட்டுப்பாடுக விதிக்கப்பட்டது. உயிரிழப்பு ஏற்பட்டதோடு, பொருளாதார இழப்புகள் ஏற்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கையால் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்ட வரப்பட்டது. அதன்பிறகு பெரிதாக கொரோனா பரவல் இல்லை.

1000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு

இதனால், சில ஆண்டுகளாகவே மக்கள் இயல்பு நிலையில் உள்ளனர். இந்த சூழலில்,  தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.  மேலும், இந்தியாவிலும்  கொரோனா பாதிப்புகள்  அதிகரித்து வருகிறது. NB.1.8.1 மற்றும் LF.7 ஆகிய கொரோனா வகைகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் NB.1.8.1 வகை கொரோனா கண்டறியப்பட்டது. மே மாதத்தில் LF.7 வகை கொரோனாவால் 4 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில்,   நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்புகள் தீயாய் பரவி வருகிறது. அதாவது, தற்போது 1,009 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக 430 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநில  வாரியான பாதிப்பு விவரம்


மகாராஷ்டிராவில் 209 பேரும், டெல்லியில் 104 பேரும், குஜராத்தில் 83 பேரும், கர்நாடகாவில் 47 பேரும், உத்தர பிரதேசத்தில் 15 பேரும், மேற்கு வங்கத்தில் 12 பேரும், தமிழகத்தில் 69 பேரும், ராஜஸ்தானில் 13 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரத்தில் 752ஆக இருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது, 1,000-ஐ தாண்டியுள்ளது. இதில் கர்நாடகாவில் ஒருவரும், கேரளாவில் 2 பேரும், மகாராஷ்டிராவில் 3 பேரும்  கொரோனா  தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளது பொதுமக்களிடையே பீதியடைய வைத்துள்ளது.  கர்நாடகாவிலும், கேரளாவிலும் முகக் கவசம் கட்டாயம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் ஆபத்தா?

இந்தியாவில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று லேசானது என்றும் இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ராஜீவ் பெஹ்ல் கூறியுள்ளார்.  முன்னதாக,  மத்திய சுகாதாரத்துறையும் தற்போது பரவி வரும் கொரோனா தொற்று தீவிரமானது இல்லை என்றும் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடியும் என்றும் கூறியுள்ளது. இந்த வகை கொரோனா தொற்றை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை கூறியிருந்தது.

Follow Us