Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வேகமாக பரவும் கொரோனா.. தயார் நிலையில் கேரளா, தமிழ்நாடு மருத்துவமனைகள்.. மத்திய அரசு முக்கிய தகவல்!

India Covid Cases In India : இந்தியாவில் மே மாதத்தில் இருந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

வேகமாக பரவும் கொரோனா.. தயார்  நிலையில் கேரளா, தமிழ்நாடு மருத்துவமனைகள்..  மத்திய அரசு முக்கிய தகவல்!
கொரோனா வைரஸ்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 May 2025 10:32 AM

டெல்லி, மே 25 : இந்தியாவில் கொரோனா தொற்று (India covid cases) பாதிப்புகள் தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்ராவில் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து மருத்துவமனைகளையும் தயார் நிலையில் வைக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  இந்தியாவில் புதிதாக பரவும் கொரோனா வைரஸ் NB.1.8.1 வகை  மற்றும் LF.7 என்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த கொரோனா வகை, லேசானவை என்றும் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடியும் என சுகாதாரத்துறை கூறியுள்ளது. தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனான பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிங்கப்பூர், ஹாங்காங்கில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் இருந்தே கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், இந்தியாவிலும் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா  பாதிப்புகள்

தற்போது, இந்தியாவில் 257 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 23 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் நான்கு பேரும், தெலங்கானாவில் ஒருவருக்கும், பெங்களூருவில் 9 மாத குழந்தைக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே மாதத்தில் மட்டும் கேரளாவில் 95 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் 66 பேரும், மகாராஷ்டிராவில் 56 பேரும், கர்நாடகாவில் 35 பேரும், குஜராத்தில் 6 பேரும், ஹரியானாவில் ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தயார் நிலையில் மருத்துமனைகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதை அடுத்து, கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள், ஆக்ஸிஜன் வசதிகளை முறையாக இருப்பில் வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், புதிதாக பரவும் கொரோனா பாதிப்புகள் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பரவும் கொரோனாவால் ஆபத்தா?

இந்தியாவில் பதிவான கொரோனா பாதிப்புகள் குறித்து சுகாதார ஆராய்ச்சித் துறையின் செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் பரவிய கொரோனா பாதிப்புகள் லேசானவை என்றும் வீட்டிலேயே சிகிச்சை அளிக்க முடியும் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த NB.1.8.1 வகை  மற்றும் LF.7 என்று வகை கொரோனா தொற்று சீனா போன்ற நாடுகளில் பரவும் என்றும் இருப்பனும்  வீரியம் இல்லாதவை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது. தற்போது இந்த வகை கொரோனா தான் இந்தியாவில் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா தொற்றை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.

சீனா போன்ற நாடுகளில் கொரோனா அதிகம் பரவுவதற்கு இதுவே என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில்  பரவும் இந்த கொரோனா வைரஸால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

”பெண்களுக்கு தைரியம் இல்லை” பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!
”பெண்களுக்கு தைரியம் இல்லை” பாஜக எம்.பி. சர்ச்சை பேச்சு!...
தக் லைஃப் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா
தக் லைஃப் தொடர்பான சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா...
ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம்!
ஆபரேஷன் சிந்தூர்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம்!...
வீட்டில் எந்த திசையில் விளக்கேற்றினால் என்ன பலன்?
வீட்டில் எந்த திசையில் விளக்கேற்றினால் என்ன பலன்?...
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. தீர்ப்பு தேதி அறிவிப்பு...
பருத்திவீரன் டூ மெய்யழகன்... ஹேப்பி பர்த்டே கார்த்தி!
பருத்திவீரன் டூ மெய்யழகன்... ஹேப்பி பர்த்டே கார்த்தி!...
ஜூன் 2025 ராசிபலன்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்
ஜூன் 2025 ராசிபலன்.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அள்ளும்...
"ரெய்டுக்கு பயந்து தான் டெல்லி சென்றார்" இபிஎஸ் விமர்சனம்
”இனி அமைதியாக இருக்க மாட்டோம்" கனிமொழி எம்.பி பேச்சு
”இனி அமைதியாக இருக்க மாட்டோம்
மணிரத்னம் சார் ஏன் என்னை நடிக்க கூப்பிடலனு அப்பாகிட்ட அழுதேன்
மணிரத்னம் சார் ஏன் என்னை நடிக்க கூப்பிடலனு அப்பாகிட்ட அழுதேன்...
அதிகாலை பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. அதிர்ந்த சிவகாசி..!
அதிகாலை பட்டாசு ஆலையில் வெடி விபத்து.. அதிர்ந்த சிவகாசி..!...