AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Covid 19 : இந்தியாவில் 3,395 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு.. பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!

3395 Covid Cases Filed in India | உலக அளவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் மாநில வாரியான கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Covid 19 : இந்தியாவில் 3,395 ஆக உயர்ந்த கொரோனா பாதிப்பு.. பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 May 2025 18:55 PM IST

சென்னை, மே 31 : உலக அளவில் கொரானாவின் (Corona) தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிலும் கொரானா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி, இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,395 ஆக உள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் மாநில வாரியான கொரோனா பாதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் எந்த மாநிலத்தில் அதிக கொரோனா பாதிப்பு உள்ளது, தமிழகத்தில் எத்தனை கொரோனா பாதிப்பு உள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாநில வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

இன்று (மே 31, 2025) காலை 8 மணி நிலவரப்படி இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,395 ஆக கணக்கிடப்பட்டுள்ளது. இதேபோல பலி எண்ணிக்கை 26 ஆக உள்ளது. இந்த கணக்கெடுப்பில் மாநில வாரியான பாதிப்பு விவரங்களும் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,395 ஆக உயர்வு

  • தமிழ்நாடு – 185 கொரோனா பாதிப்புகள்
  • புதுச்சேரி – 41 கொரோனா பாதிப்புகள்
  • ஆந்திர பிரதேசம் – 17 கொரோனா பாதிப்புகள்
  • தெலங்கானா – 03 கொரோனா பாதிப்புகள்
  • ஒடிசா – 07 கொரோனா பாதிப்புகள்
  • சத்தீஸ்கர் – 06 கொரோனா பாதிப்புகள்
  • மேற்கு வங்கம் – 205 கொரோனா பாதிப்புகள்
  • மிசோரம் – 02 கொரோனா பாதிப்புகள்
  • ஜார்கண்ட் – 06 கொரோனா பாதிப்புகள்
  • அசாம் – 02 கொரோனா பாதிப்புகள்
  • அருணாச்சல பிரதேசம் – 03 கொரோனா பாதிப்புகள்
  • பீகார் – 02 கொரோனா பாதிப்புகள்
  • உத்தர பிரதேசம் – 117 கொரோனா பாதிப்புகள்
  • உத்தரகாண்ட் – 02 கொரோனா பாதிப்புகள்
  • டெல்லி – 375 கொரோனா பாதிப்புகள்
  • காஷ்மீர் – 06 கொரோனா பாதிப்புகள்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் – 06 கொரோனா பாதிப்புகள்
  • சண்டிகர் – 01 கொரோனா பாதிப்புகள்
  • பஞ்சாப் – 05 கொரோனா பாதிப்புகள்
  • ஹரியானா – 26 கொரோனா பாதிப்புகள்
  • ராஜஸ்தான் – 60 கொரோனா பாதிப்புகள்
  • குஜராத் – 265 கொரோனா பாதிப்புகள்
  • மஹாராஷ்டிரா – 467 கொரோனா பாதிப்புகள்
  • கோவா – 08 கொரோனா பாதிப்புகள்
  • கர்நாடகா – 234 கொரோனா பாதிப்புகள்
  • கேரளா – 1336 கொரோனா பாதிப்புகள்

மேற்குறிப்பிட்டுள்ள இந்த பட்டியலின் அடிப்படையில் இந்தியாவில் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 1,336 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 467 கொரோனா பாதிப்புகளும், டெல்லியில் 375 கொரோனா பாதிப்புகளும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை 185 கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளது.

முக கவசம் அணிய அறிவுறுத்தியுள்ள அரசு

இந்தியாவில் மட்டுமன்றி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய தகிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us