”மறைமுக போர் அல்ல.. பாகிஸ்தானின் உத்தி” பயங்கரவாத தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் மோடி!
PM Modi In Gujarat : பயங்கரவாத தாக்குதல் மறைமுக போர் அல்ல. நன்கு திட்டமிடப்பட்ட போர் உத்தி என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மீண்டும் தாக்குதல் நடத்தினால், அதற்கு ஏற்ப இந்தியா பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரித்துளளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதல் முறையாக, பிரதமர் மோடி குஜராத்திற்கு சென்றபோது, அங்கு இதுபோன்று பேசியுள்ளார்.

குஜராத், மே 27 : நேரடிப் போரில் வெற்றி பெற முடியாததால், பாகிஸ்தான் எப்போதும் மறைமுகப் போரையே நாடுகிறது என்று பிரதமர் மோடி (Pm modi) தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு முதல் முறையாக, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். குஜராத் நகர்ப்புற வளர்ச்சியின் 20வது ஆண்டு விழாவில் பங்கேற்று காந்திநகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ச்சி, நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானை (terror attack) கடுமையாக சாடினார். அவர் பேசுகையில், “1947ஆம் ஆண்டில் நாடு மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது. அன்றிரவே, காஷ்மீரில் முதல் பயங்கரவாதத் தாக்குதல் நடந்தது. பயங்கரவாத அமைப்பு என்ற பெயரில் பயங்கரவாதிகளின் உதவியுடன் பாகிஸ்தான் இந்தியாவின் ஒரு பகுதியை கைப்பற்றியது.
குஜராத்தில் பிரதமர் மோடி
பயங்கரவாத அமைப்பு அன்று கொல்லப்பட்டு, சர்தார் படேலின் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், கடந்த 75 ஆண்டுகளாக நடந்து வரும் பயங்கரவாத சம்பவங்கள் இருந்திருக்காது. ஆனால், அன்று ஆனால் சர்தார் சாஹிப்பின் வார்த்தைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஏப்ரல் 22ஆம் தேதி இரவு கொல்லப்பட்டவர்களின் உடல்களுக்கு பாகிஸ்தானில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.




அவர்களின் இறுதிச்சடங்கள் இந்திய கொடிகள் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்குள்ள இராணுவம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தியது. மே 26, 2014 அன்று, நான் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன். அப்போது, இந்தியாவின் பொருளாதாரம் 11வது இடத்தில் இருந்தது. இன்று, இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது. இப்போது நாம் ஜப்பானை விஞ்சிவிட்டோம் என்பது நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்.
“இந்தியாவில் பயங்கரவாதம் அழிக்கப்படும்”
#WATCH | Gandhinagar: Prime Minister Narendra Modi says “I say this can no longer be called a proxy war because the terrorists whose funerals were held after May 6 were given state honours in Pakistan. Pakistan’s flags were placed on their coffins, and their army saluted them. It… pic.twitter.com/AIaejeWDMR
— ANI (@ANI) May 27, 2025
நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றமே எங்களது நோக்கம். உடல் எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும், ஒரு முள் குத்தினால் கூட, முழு உடலும் பதட்டமாகவே இருக்கும். இப்போது, அந்த முள்ளை அகற்ற முடிவு செய்துள்ளோம். இந்தியாவில் இருந்து பயங்கரவாத முள் அழிக்கப்படும். நாங்கள் அமைதியாக இருக்க விரும்புகிறோம், மற்றவர்களையும் அமைதியாக வாழ விட விரும்புகிறோம். பயங்கரவாதம் மறைமுகப் போர் அல்ல, அது உங்கள் போர் உத்தி.
நீங்கள் எங்கள் மீது போர் தொடுக்கிறீர்கள். நேரடிப் போரில் வெற்றி பெற முடியாததால், பாகிஸ்தான் எப்போதும் மறைமுகப் போரையே நாடுகிறது. ஆனால், இனி தாக்குதல் நடத்தியனால் அமைதியாக இருக்க மாட்டோம். பதிலடி கொடுப்போம். இந்திய ராணுவம் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. இந்தியாவிடம் இருந்து வெல்ல முடியாது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொண்டது” என்று தெரிவித்தள்ளார்.
2025 மே 26ஆம் தேதியான நேற்று பேசிய பிரதமர் மோடி, “நான் பாகிஸ்தான் மக்களிடம் கேட்க விரும்புகிறேன். பயங்கரவாதத்தால் நீங்கள் என்ன பெற்றீர்கள்? பயங்கரவாதம் என்ற நோயிலிருந்து பாகிஸ்தானை விடுவித்து விடுங்கள். அமைதியான வாழ்க்கை வாழுங்கள்” என்று தெரிவித்து இருந்தார்.