Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

“ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவை மாற்றியது” மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

PM Modi Mann Ki Baat : மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 2025 மே 25ஆம் தேதியான இன்று உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை நாட்டையே மாற்றியுள்ளது என்றும் நாட்டு மக்களை பாதித்துள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைத்தது குறித்தும் குறிப்பிட்டார்.

“ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவை மாற்றியது” மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடிImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 May 2025 13:17 PM

டெல்லி, மே 25 : மன் கி பாத் நிகழ்ச்சியில் (Mann Ki Baat) பிரதமர் மோடி 2025 மே 25ஆம் தேதியான இன்று உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூர் (operation sindoor), பயங்கரவாதம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். அவர் பேசுகையில், “இன்று முழு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது. கோபத்தாலும் உறுதியாலும் நிறைந்துள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஆபரேஷன் சிந்தூர் நாட்டையே மாற்றியது. சிந்தூர் நடவடிக்கை நாட்டு மக்களை மிகவும் பாதித்துள்ளது. பல குடும்பங்கள் அதைத் தங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றியுள்ளன. பீகார், உத்தர பிரதேச உள்ளிட்ட நகரில் அந்த நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டன.

“ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவை மாற்றியது”

பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் சக்தியையும் புகுத்தியுள்ளது. சிந்தூர் நடவடிக்கையின் போது நமது படைகள் வெளிப்படுத்திய துணிச்சல் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைத்துள்ளது. எல்லையைத் தாண்டி பயங்கரவாதிகளின் முகாம்களை நமது படைகள் அழித்தது அசாதாரணமானது.

இந்த நடவடிக்கையின் வெற்றியைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் தேசபக்தி கவிதைகள் முதல் குழந்தைகளின் ஓவியங்கள் இடம்பெற்றன” என்றார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும், குஜராத்தின் கிர் காடுகளில் சிங்கங்களின் எண்ணிக்கை 674-லிருந்து 891 ஆக அதிகரித்துள்ளது.  இந்த சிங்கங்களின் எண்ணிக்கை மிகவும் ஊக்கமளிக்கிறது. இந்த விலங்கு கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது உங்களுக்கு பகிர விரும்புகிறேன்.

இந்தப் பயிற்சி மிகவும் சவாலானது. சிங்கங்கள் கணக்கெடுப்பு 11 மாவட்டங்களில், 35 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நடத்தப்பட்டது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். வன அதிகாரிகள் பதவிக்கு பெண்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்ட முதல் மாநிலம் குஜராத் ஆகும். வனவிலங்கு பாதுகாப்பிற்காக நாம் இது போல விழிப்புடனும் இருக்க வேண்டும்” என்றார்.

“சர்க்கரை உட்கொள்வதால் பாதிப்பு”


மேலும், பேசிய பிரதமர் மோடி, “பள்ளிகளில் கரும்பலகைக்கு பதில் சர்க்கரை அளவுக்கான பலகைகள் வைக்கப்படுகின்றன. குழந்தைகள் எடுத்துக் கொள்ளும் சர்க்கரையின் அளவை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்க்கரை உட்கொள்வாதல் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதிக சர்க்கரை உட்கொள்வதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது. இது ஒரு தனித்துவமான முயற்சி” என்றார்.

 

 

அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...