Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெங்களூரு கூட்ட நெரிசல்.. உயிரிழப்புக்கு காரணம் என்ன? கர்நாடக முதல்வர் விளக்கம்!

Bengaluru Stampede : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார். சின்னசாமி மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே இருக்க முடியும் என்றும் ஆனால் 4 லட்சம் பேர் மைதானத்தில் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

பெங்களூரு கூட்ட நெரிசல்.. உயிரிழப்புக்கு காரணம் என்ன? கர்நாடக முதல்வர் விளக்கம்!
பெங்களூரு கூட்ட நெரிசல்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 05 Jun 2025 10:28 AM

பெங்களூரு, ஜூன் 05 : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சின்னசாமி மைதானத்தில் (Chinnaswamy Stadium) ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசிலில் (bengaluru stampede) சிக்கி 11 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு கர்நாடகாவை ஆளும் காங்கிரஸை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா செய்தியாளர்கள் அளித்த பேட்டியில் முக்கிய விஷயங்களை கூறி இருக்கிறார். அப்போது பேசிய அவர், “ஆர்சிபி கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நடந்திருக்கக்கூடாது.

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு காரணம் என்ன?

இந்த சம்பவம் குறித்து அரசு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவத்தை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை. மக்கள் மைதானத்தின் கதவுகளை உடைத்தனர்.

இதனால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இவ்வளவு பெரிய கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஆனால் 2 முதல் 3 லட்சம் பேர் மைதானத்தில் இருந்தனர். பெங்களூரு மைதானத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி தங்கள் சாம்பியன் அணியைப் பார்த்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளன. இப்போது இங்கும் அங்கும் நடந்ததாகக் கூறி இதை ஒப்பிட்டுப் பார்த்து நான் இதை நியாயப்படுத்தப் போவதில்லை. மகா கும்பமேளாவில் 50 முதல் 60 இறந்தனர். நான் அதை விமர்சிக்கவில்லை.

சித்தராமையா விளக்கம்


காங்கிரஸ் விமர்சித்தால், அது வேறு விஷயம். நானோ அல்லது கர்நாடக அரசோ விமர்சித்தாரா? சின்னசாமி மைதானத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும்” என்று கூறினார். முன்னதாக, கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களை முதல்வர் சித்தராமையா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நடந்தது என்ன?

அகமதாபாத்தல் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த ஐபிஎஸ் இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 18 ஆண்டுகளுக்கு பிறகு, பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது. இதனால், ஆர்சிபி ரசிர்கள் உற்சாக அடைந்தனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி சாம்பியன் பட்டத்தை வென்றதை அடுத்து, சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட பிரதமர் மோடி, “பெங்களூரில் நடந்த விபத்து மிகவும் மனதைப் பதற வைக்கிறது. இந்த துயரமான நேரத்தில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது இரங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.