Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போலீசாரின் அனுமதி மறுப்பால் ஆர்சிபியின் பேரணி ரத்து – ரசிகர்கள் ஏமாற்றம்

RCB Victory Parade Cancelled by Bengaluru Police : கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக அந்த அணி பெங்களூரு நகரில் பேரணி நடத்த திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் போக்குவரத்து நெரிசலைக் காரணம் காட்டி பெங்களூரு நகர காவல்துறையினர் பேரணிக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

போலீசாரின் அனுமதி மறுப்பால் ஆர்சிபியின் பேரணி ரத்து – ரசிகர்கள் ஏமாற்றம்
ஆர்சிபி அணி
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jun 2025 16:17 PM

கிட்டத்தட்ட 18 வருட நீண்ட எதிர்பார்ப்புக்கு பின், ஐபிஎல் 2025 (IPL 2025) சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru). அந்த அணி ரசிகர்கள் ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் ‘இ சாலா கப் நம்தே’ என சொல்லி வந்தது இம்முறை நிஜமாகியிருக்கிறது. இந்த நிலையில் பெங்களூரு நகரில் ரசிகர்களுடன் வெற்றியைக் கொண்டாடும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நகரின் பெரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், பெங்களூரு நகர காவல்துறையினர் ஆர்சிபி அணியின் ஓபன் பஸ் வெற்றி பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனையடுத்து, மாலை 5 மணி முதல் 6 மணி வரை எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் மட்டும் பாராட்டு விழா நடைபெறவுள்ளது. இதனிடையே, ஸ்டேடியம் அருகில் பார்கிங் வசதி குறைவாக இருப்பதால், பொது மக்களுக்கு மெட்ரோ மற்றும் பஸ்கள் போன்ற பொது போக்குவரத்துகளை பயன்படுத்துமாறு போலீசார் கேட்டுள்ளனர்.  ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த பேரணி ரத்து செய்யப்பட்ட சம்பவம் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஆர்சிபி வரலாற்றுச் சாதனை!

கடந்த ஜூன் 3, 2025  அன்று நடந்த ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆர்சிபி அணி முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியிருக்கிறது இந்தப் போட்டியில், விராட் கோலி 43 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். ஆர்சிபி அணியில் பேட்டிங்கில் அனைவரும் சிறப்பாக பங்களித்து, பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்கு இலக்காக 190 ரன்கள் என்ற வலுவான ஸ்கோர் பதிவு செய்தது வெற்றிக்கு முக்கிய காரணம். குறிப்பாக அர்சிபி அணி வீரர்கள் பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர்.

பெங்களூரு வந்த விராட் கோலிக்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உற்சாக வரவேற்பு

முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தபடி, ஆர்சிபி அணியின் ஓபன் பஸ் பேரணி இன்று மதியம் 3:30 மணிக்கு விதான சவதாவில் துவங்கி, 5 மணிக்கு சின்னசாமி ஸ்டேடியத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக  போலீசாரின் அனுமதி மறுப்பு காரணமாக, அந்த பேரணியை தற்போது முழுவதுமாக ரத்து செய்ய நேர்ந்துள்ளது. இதனையடுத்து சின்னச்சாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணி வீரர்களைக் காண ரசிகர்கள் அவலுடன் காத்திருக்கின்றனர். இதனையடுத்து ரசிகர்கள்  பொது பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். முன்னதாக பெங்களூருவில் ஆர்சிபி அணி வெற்றிபெற்றபோது அந்த அணி ரசிகர்கள் பெங்களூர்  சாலைகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர்களை லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.