AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

RCB Won the IPL Trophy : ‘ஆர்சிபிக்காக என் இளமை உட்பட அனைத்தையும் கொடுத்திருக்கிறேன்’ – உணர்ச்சிவசப்பட்ட விராட் கோலி

RCB Won the IPL Trophy: ஐபிஎல் வரலாற்றில் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கிறது. இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து பேசிய விராட் கோலி, ஆர்சிபி அணிக்காக தன் இளமையைக் கொடுத்திருப்பதாக உணர்வுப்பூர்வமாக பேசியிருக்கிறார்.

RCB Won the IPL Trophy : ‘ஆர்சிபிக்காக என் இளமை உட்பட அனைத்தையும் கொடுத்திருக்கிறேன்’ – உணர்ச்சிவசப்பட்ட விராட் கோலி
விராட் கோலி
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jun 2025 00:22 AM IST

ஐபிஎல் 2025 (IPL) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியின் சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.  தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் வழக்கம் போல் அதிரடியாக விளையாடியானார்.  ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. 2 ஓவரின் போது 9 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த சால்ட், கைல் ஜேமிசன் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் மயங்க் அகர்வாலும் விராட் கோலியும் களமிறங்கி ஆர்சிபி அணியை சரிவிலிருந்த மீட்டனர். ஆனால் ரன்கள் மெதுவாகவே உயர்ந்தன. ஏழாவது ஓவரில் 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த மயங்க் அகர்வாலை  யுஸ்வேந்திர சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், அதிரடியாக ஆடி தனது அணிக்கு ரன் சேர்க்க முயன்றார்.  ​​அவரது ஆட்டமும் வெகு நேரம் நீடிக்க வில்லை. 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்த பட்டிதார். ஜேமிசனின் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.

விராட் கோலி அதிரடி

மற்றொரு பக்கம் விராட் கோலி மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆர்சிபி அணிக்கு உதவினர். ஆனால் 15வது ஓவரில், 35 பந்துகளில் 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.  பின்னர் 17 மற்றும் 18வது ஓவர்களில்  ஜிதேஷ் சர்மாவும் லிவிங்ஸ்டனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது ஆர்சிபி ரசிகர்களுக்கு பேரிடியாக அமைந்தது. இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் சார்பாக  அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளும் கெயில் ஜேமிசன் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் ஓமர்ஷாய், விஷ்வக் விஜய் குமார், யுவேந்திர சாகல் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

‘இந்த அணிக்காக நான் என் இளமையைக் கொடுத்திருக்கிறேன்’

 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயித்த 191 ரன்கள் இலக்குடன்  பஞ்சாப் கிங்ஸ் களமிறங்கியது. தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ப்ரப்சிம்ரன் சிங் இருவரும் நல்ல துவக்கம் தந்தனர். பிரியான்ஷ் ஆர்யா 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்ததும், ப்ரப்சிம்ரன் சிங் 22 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அதிலும் கடந்த போட்டியில் ஃபார்முக்கு திரும்பிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.  ஒரு கட்டத்தில் 79 ரன்களுக்குள் மூன்று முக்கிய வீரர்களை இழந்தது. தடுமாறியது.

அதன்பிறகு உள்ளே வந்த நேஹல் வதேரா, 18 பந்துகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். மார்கஸ் ஸ்டோனிஸ் 2 பந்துகளில் ஆட்டமிழக்க, அணியின் நம்பிக்கையும் சிதைந்தது.  கடைசி வரை போராடிய ஒரே வீரர் ஷஷாங்க் சிங் 30 ரன்களில் 61 ரன்கள் எடுத்திருந்தார்.  இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பக்கம் வெற்றி திரும்பியது. அந்த அணி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது.

விராட் கோலியின் கண்களில் கண்ணீர்

18 ஆண்டுகளுக்கு பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற்ற நிலையில் விராட் கோலியின் கண்களில் ஆனந்த கண்ணீரை பார்க்க முடிந்தது. அவருக்கு அவரு மனைவி அனுஷ்கா சர்மா கட்டிப்பிடித்து ஆறுதல் சொன்னார்.

Follow Us