AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆர்சிபி ஜெயிக்க வேண்டும் – கோவில்களில் விராட் கோலி போட்டோவுக்கு ரசிகர்கள் அர்ச்சனை – வைரலாகும் வீடியோ

IPL 2025 Final: ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டியில் கோப்பை வெல்ல வேண்டும் என விராட் கோலியின் போட்டோவை வைத்து கோவிலில் அவரத ரசிகர்கள் அர்ச்சனை செய்து வருகின்றனர்.

ஆர்சிபி ஜெயிக்க வேண்டும் – கோவில்களில் விராட் கோலி போட்டோவுக்கு ரசிகர்கள் அர்ச்சனை – வைரலாகும் வீடியோ
விராட் கோலி
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Jun 2025 21:14 PM IST

இந்தியாவில் ஐபிஎல் (IPL)  2025 போட்டிகள் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இறுதிப்போட்டியில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bangaluru), ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் மோதுகின்றன. 18 ஆண்டு கால ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி இந்த முறை வெல்ல கடுமையாக போராடி வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு ரசிகர்கள்  தங்கள் அணி  வெற்றி பெற வேண்டும் என கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர்.  நாட்டின் வெவ்வேறு வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் ரசிகர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் பெயரில் யாகங்கள் நடத்தும் வீடியோக்கள்  தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. இந்த சம்பவம ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன.

முதன்முறை கோப்பையை வெல்ல காத்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நான்காவது முறையாக ஐபிஎல் இறுதி போட்டிகளில் பங்கேற்கிறது.  இதற்கு முன் கடந்த 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டிகளில் அந்த அணி பங்கேற்றிருந்தது. ஆனால் கடந்த மூன்று முறைகளிலும் தோல்வியைச் சந்தித்த ஆர்சிபி அணி, இம்முறை நிச்சயம் அந்த அணி வெற்றி பெறும் என உறுதியாக நம்புகின்றனர். இந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 14 போட்டிகளில் விளையாடி 19 புள்ளிகளை பெற்றிருந்தது. இந்த முறை பஞ்சாப் கிங்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதே போல இறுதிப் போட்டியிலும் பஞ்சாப் அணியை எளிதாக வெற்றி பெறும் என அனைவரது எதிர்ப்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

மற்றொரு புறம் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை. கடந்த 2014  ஆம் ஆண்டு கிங்ஸ் பஞ்சாப் அணி இறுதிப்போட்டியில் விளையாடியிருந்தனர். இந்த நிலையில் இரண்டாவது முறையாக அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை அந்த அணி நிச்சயம் வெல்லும் என அந்த அணியின் நம்புகின்றனர்.

கோவில்களில் வேண்டுதல்

 

கடந்த சில நாட்களாகவே இந்தியாவின் பல மாநிலங்களில் ஆர்சிபி ரசிகர்கள் கோவில்களில் அணியின் ஜெர்ஸிகளை வைத்து விராட் கோஹ்லி, ஃபாஃப் டு பிளெஸிஸ் உள்ளிட்ட வீரர்களுக்காக அர்ச்சனை செய்து வருகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வெல்லும் என விராட் கோலி ரசிகர்களும் ஆர்சிபி ரசிகர்களும் உறுதியாக நம்புகின்றனர். ஈ சாலா கப் நம்தே (ee sala cup namde) என பலரும் கன்னடத்தில் ட்வீட் செய்து வருகின்றனர்.

விராட் கோலி போட்டோவிற்கு கோவிலில் அரச்சனை

 

இந்த இறுதிப் போட்டி வென்றால், அது வெறும் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெறுதல் அல்ல. அது, ஆண்டுகளாக மனமொட்டிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கான உணர்ச்சிப் பொக்கிஷமாக இருக்கும்.

Follow Us