IPL 2025 Final Prize Money: ஐபிஎல்லில் வெற்றி பெறும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை..? ரன்னர் அப் அணிக்கு இவ்வளவு கோடியா..? முழு விவரம்!
Royal Challengers Bengaluru vs Punjab Kings: ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் பஞ்சாப் கிங்ஸுக்கும் இடையே நடைபெறுகிறது. சாம்பியன் அணி ரூ.20 கோடி பரிசுத் தொகையும், ரன்னர் அப் அணி ரூ.13 கோடி பரிசுத் தொகையும் பெறும். ஆரஞ்சு மற்றும் ஊதா தொப்பி விருதுகளுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். பிற சிறப்பு விருதுகளுக்கும் பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற ஐபிஎல் 2025 (IPL 2025) திருவிழாவானது இன்றுடன் அதாவது 2025 ஜூன் 3ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இன்றைய ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bengaluru), ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் மோதுகிறது. ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை கோப்பையை வெல்லாத காரணத்தினால், எந்த அணி முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்ற ஆவல் எழுந்துள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் 2025ல் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
எவ்வளவு பரிசுத்தொகை:
Here is the break down of IPL 2025 Prize Money Distribution
📷: IPL#IPL2025 #RCB #PBKS #RCBvPBKS #IPLT20 pic.twitter.com/LJDuufbBeb
— SportsTiger (@The_SportsTiger) June 2, 2025




ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 1 கோடி அல்ல, 2 கோடி அல்ல, மொத்தமாக ரூ. 20 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். அதேநேரத்தில், ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில் தோற்கும் அணிக்கு, அதாவது ரன்னர் அப் ஆகும் அணிக்கு ரூ. 13 கோடி ரூபாய் வழங்கப்படும்.
பர்பிள் கேப் மற்றும் ஆரஞ்சு கேப் வென்றவர்களுக்கு எவ்வளவு பணம்..?
ஐபிஎல் 2025 சீசனில் அதிக ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றும் வீரருக்கு பரிசுத்தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், ஐபிஎல் 2025 சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றி பர்பிள் தொப்பியை வெல்லும் வீரருக்கு, பரிசுத்தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.
சிறப்பு விருதுகளை வாங்கும் வீரருக்கு எவ்வளவு பரிசுத்தொகை..?
- ஆரஞ்சு தொப்பி – ரூ. 10 லட்சம்
- ஊதா நிற தொப்பி – ரூ. 10 லட்சம்
- சீசனின் வளர்ந்து வரும் வீரர் – ரூ. 20 லட்சம்
- சீசனின் மிகவும் மதிப்புமிக்க வீரர் – ரூ. 10 லட்சம்
- சீசனின் சூப்பர் ஸ்ட்ரைக்கர் – ரூ. 10 லட்சம்
- சீசனின் சிறந்த வீரர் – ரூ. 10 லட்சம்
- ஒரு சீசனில் அதிக சிக்ஸர்கள் – ரூ. 10 லட்சம்
- சீசனின் ஆட்டத்தை மாற்றியவர் – ரூ. 10 லட்சம்
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி:
முன்னதாக, ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டனில் நடைபெறவிருந்தது. அதன்பிறகு, போட்டி நிறுத்தம் மற்றும் மழை காரணமாக, பிறகு, ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி நடைபெறும் இடம் அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டது. நிறைவு விழா மாலை 6 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் 2025 தொடக்கவிழாவின்போது சினிமா பிரபலங்களான ஷாருக் கான் , வருண் தவான், கரண் அவுஜ்லா மற்றும் ஸ்ரேயா கோஷல் கலைஞர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அந்தவகையில், ஐபிஎல் 2025 நிறைவு விழா மிகவும் சிறப்பானதாக மாற்ற இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் சங்கர் மகாதேவன் குழு, ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட இந்திய ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சங்கர் மகாதேவனின் மகன்கள் சித்தார்த் மற்றும் சிவம் ஆகியோரும் இந்த நிறைவு விழாவில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
ஐபிஎல் 2025 நிறைவு விழா மாலை 6 மணிக்கு தொடங்கும் நிலையில், அதன் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி 1:30 மணி நேரத்திற்குப் பிறகு தொடங்கும்.