AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL Winners List: 2008 முதல் 2024 வரை! எந்த சீசனில் எந்த அணி சாம்பியன்..? முழு பட்டியல் இதோ!

IPL 2008-2024 Winners and Runners-Up: 2008 முதல் 2024 வரையிலான ஐபிஎல் சீசன்களின் வெற்றியாளர்கள் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற அணிகளின் முழுமையான பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் அதிக முறை கோப்பையை வென்றுள்ளன. இந்தக் கட்டுரை, ஒவ்வொரு ஆண்டும் சாம்பியன் பட்டம் வென்ற அணி மற்றும் இரண்டாம் இடம் பெற்ற அணியின் விவரங்களையும், அதிக முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்ற அணிகளின் விவரங்களையும் விரிவாக விளக்குகிறது.

IPL Winners List: 2008 முதல் 2024 வரை! எந்த சீசனில் எந்த அணி சாம்பியன்..? முழு பட்டியல் இதோ!
ஐபிஎல்லில் இதுவரை சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Jun 2025 14:44 PM IST

ஐபிஎல் 2025ன் (IPL 2025) இறுதிப்போட்டியில் நாளை அதாவது 2025 ஜூன் 3ம் தேதி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும் மோதுகிறது. அதன்படி, இந்தமுறை ஒரு புதிய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுவது உறுதியாகிவிட்டது. கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடி வருகிறது. ஆனால், இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்தநிலையில், 2008ம் ஆண்டு இதுவரை எந்த சீசனில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்றது..? எந்த அணி 2ம் இடத்தை பிடித்தது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.

அதிக முறை கோப்பை:

ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் உள்ளது. இந்த 2 அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இதை தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் தலா ஒரு முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

2008 முதல் 2024 வரை – ஐபிஎல்லில் சாம்பியன் பட்டம் வென்ற அணிகள்:

  • ஐபிஎல் 2008 சாம்பியன்: ராஜஸ்தான் ராயல்ஸ்
  • ஐபிஎல் 2009 சாம்பியன்: டெக்கான் சார்ஜர்ஸ்
  • ஐபிஎல் 2010 சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ஐபிஎல் 2011 சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ஐபிஎல் 2012 சாம்பியன்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • ஐபிஎல் 2013 சாம்பியன்: மும்பை இந்தியன்ஸ்
  • ஐபிஎல் 2014 சாம்பியன்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • ஐபிஎல் 2015 சாம்பியன்: மும்பை இந்தியன்ஸ்
  • ஐபிஎல் 2016 சாம்பியன்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • ஐபிஎல் 2017 சாம்பியன்: மும்பை இந்தியன்ஸ்
  • ஐபிஎல் 2018 சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ஐபிஎல் 2019 சாம்பியன்: மும்பை இந்தியன்ஸ்
  • ஐபிஎல் 2020 சாம்பியன்: மும்பை இந்தியன்ஸ்
  • ஐபிஎல் 2021 சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ஐபிஎல் 2022 சாம்பியன்: குஜராத் டைட்டன்ஸ்
  • ஐபிஎல் 2023 சாம்பியன்: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ஐபிஎல் 2024 சாம்பியன்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனிலும் 2ம் இடம் பிடித்த அணிகள்:

  • 2008: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2009: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • 2010: மும்பை இந்தியன்ஸ்
  • 2011: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • 2012: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2013: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2014: பஞ்சாப் கிங்ஸ்
  • 2015: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2016: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • 2017: ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ்
  • 2018: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • 2019: சென்னை சூப்பர் கிங்ஸ்
  • 2020: டெல்லி கேபிடல்ஸ்
  • 2021: கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • 2022: ராஜஸ்தான் ராயல்ஸ்
  • 2023: குஜராத் டைட்டன்ஸ்
  • 2024: சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ஐபிஎல் இறுதிப்போட்டியில் அதிகமுறை விளையாடிய அணிகள்:

ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை இறுதிப்போட்டியில் விளையாடிய அணி என்ற பெருமையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 10 இறுதிப்போட்டிகளில் விளையாடி 5 முறை சாம்பியன் பட்டத்தையும், 5 முறை 2வது இடத்தையும் பிடித்துள்ளது. அதேநேரத்தில், மும்பை அணி 6 முறை இறுதிப்போட்டிகளில் விளையாடி ஒரு முறை மட்டுமே தோல்வியை சந்தித்து, 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

 

Follow Us