Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shreyas Iyer Records: அதிகமுறை பைனல்.. பிளே ஆஃப் சுற்றில் ஆதிக்கம்.. ஒரே போட்டியில் கலக்கிய ஷ்ரேயாஸ் ஐயர்!

IPL Captaincy Records: ஐபிஎல் 2025 குவாலிஃபையர் 2ல் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், 3 வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற சாதனையைப் படைத்தார். மேலும், ஒரு சீசனில் பஞ்சாப் அணிக்காக அதிக சிக்ஸர்கள் (39) அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார். ஐபிஎல் பிளே ஆஃப்களில் 3 முறை 50+ ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையும் அவரது பெயரில் பதிவாகியுள்ளது.

Shreyas Iyer Records: அதிகமுறை பைனல்.. பிளே ஆஃப் சுற்றில் ஆதிக்கம்.. ஒரே போட்டியில் கலக்கிய ஷ்ரேயாஸ் ஐயர்!
ஷ்ரேயாஸ் ஐயர்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Jun 2025 11:50 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) குவாலிஃபையர் 2ல் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணி, மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, வருகின்ற 2025 ஜூன் 3ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 6 விக்கெட்டுக்கு இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பஞ்சாப் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு துரத்தியது. இதன்மூலம், ஐபிஎல்லில் ஷ்ரேயாஸ் ஐயர் தனித்துவமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர்:

ஐபிஎல் 2025ல் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஒரே கேப்டன் என்ற சாதனையை ஷ்ரேயாஸ் ஐயர் படைத்துள்ளார். முன்னதாக, கடந்த 2020ம் ஆண்டு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக டெல்லி கேபிடல்ஸ் அணியையும், 2024ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியையும், தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி அழைத்து சென்றுள்ளார்.

ரோஹித் சர்மா, எம்.எஸ்.தோனிக்கு பிறகு ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை தனது அணியை இறுதிப்போட்டிக்குள் அழைத்து சென்றுள்ள கேப்டன் என்ற பெருமையையும் ஷ்ரேயாஸ் ஐயர் படைத்தார். இதுதவிர, ஐபிஎல் பிளே ஆஃப்களில் பிளேஆஃப்களில் மூன்று முறை 50+ ரன்கள் எடுத்த முதல் ஐபிஎல் கேப்டனாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் உருவெடுத்துள்ளார். முன்னதாக 2020ம் ஆண்டு, துபாயில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதை தொடர்ந்து, க்டந்த 2024ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 58 ரன்களும், நேற்றைய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 81 ரன்களும் எடுத்துள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள்:

ஐபிஎல்லில் ஒரு சீசனில் பஞ்சாப் அணிக்காக அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார். இந்த சீசனில், ஷ்ரேயாஸ் ஐயர் 39 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். முன்னதாக, இந்த சாதனை பஞ்சாப் கிங்ஸின் க்ளென் மேக்ஸ்வெல்லின் பெயரில் இருந்தது. இவர் கடந்த 2013 ஐபிஎல் சீசனில் க்ளென் மேக்ஸ்வெல் 36 சிக்ஸர்கள் அடித்தார்.

ஐபிஎல் சீசனில் பிபிகேஎஸ் அணிக்காக அதிக சிக்ஸர்கள்:

39* – ஷ்ரேயாஸ் ஐயர், 2025
36 – கிளென் மேக்ஸ்வெல், 2013
34 – கிறிஸ் கெய்ல், 2019
34 – லியாம் லிவிங்ஸ்டோன், 2022
32 – கே.எல். ராகுல், 2018

கேப்டனாக அதிக வெற்றிகள்:

ஐபிஎல்லில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் இப்போது 5வது இடத்தைப் பிடித்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை கேப்டனாக 50 வெற்றிகளைப் பெற்றுள்ளார். இது தவிர, ஐபிஎல் பிளேஆஃப்களில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாடிய 3வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

கேப்டனாக அதிக ஐபிஎல் வெற்றிகள்:

136 – எம்எஸ் தோனி
89 – ரோஹித் சர்மா
71 – கௌதம் கம்பீர்
68 – விராட் கோலி
50* – ஷ்ரேயாஸ் ஐயர்