Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

KL Rahul England Tour: இங்கிலாந்து லயன்ஸூக்கு எதிராக களம்! உடனடியாக கிளம்பும் கே.எல்.ராகுல்.. பிசிசிஐ முக்கிய முடிவு..!

India A vs England Lions: ஐபிஎல் 2025 பிளே ஆஃப் முடிந்த பின், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முக்கிய முடிவெடுத்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக, கே.எல். ராகுல் இந்தியா A அணியில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார். இது இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அவரது தயார்நிலைக்கு உதவும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஜூன் 6ம் தேதி தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னர் இது நடைபெறும்.

KL Rahul England Tour: இங்கிலாந்து லயன்ஸூக்கு எதிராக களம்! உடனடியாக கிளம்பும் கே.எல்.ராகுல்.. பிசிசிஐ முக்கிய முடிவு..!
கே.எல்.ராகுல் Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 May 2025 14:39 PM

ஐபிஎல் 2025ல் (IPL 2025) நடந்து வரும் பிளே ஆஃப் போட்டிகளுக்கு மத்தியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, இந்திய அணியின் முக்கிய வீரர் ஒருவரை இங்கிலாந்துக்கு அனுப்ப இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஏற்பாடுகளை செய்துள்ளது. வருகின்ற 2025 ஜூன் 6ம் தேதி முதல் நடைபெறும் இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு (India vs England Test Series) முன் இரண்டாவது அதிகாரப்பூர்வமற்ற போட்டியில் இந்த முக்கிய பேட்ஸ்மேன் களமிறங்க இருக்கிறார். இந்திய அணி வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி முதல் ஹெடிங்லியின் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இதற்கு முன், இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையே 2 நான்கு நாள் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதன் முதல் போட்டியானது நேற்று அதாவது 2025 மே 30ம் தேதி முதல் தொடங்கியது.

யார் அந்த பேட்ஸ்மேன்..?

இந்திய பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் வருகின்ற 2025 ஜூன் 6ம் தேதி முதல் நார்தாம்ப்டனில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக களமிறங்குகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான செய்தியின்படி, கே.எல்.ராகுல் வருகின்ற 2025 ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து புறப்படுகிறார். கே.எல்.ராகுல் தனது ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ் தகுதிச் சுற்றுக்கு தகுதி பெற தவறியதால், பயிற்சி போட்டியில் தான் விளையாட வேண்டும் என்று ஆசைப்படுவதாக தேர்வாளர்களிடம் கோரிக்கை வைத்தார்.

இதை உறுதிப்படுத்திய பிசிசிஐ, “ கே.எல்.ராகுல் வருகின்ற 2025 ஜூன் 2ம் தேதி விமானம் மூலம் இந்தியா ஏ அணிக்காக 2வது பயிற்சி போட்டியில் விளையாடுவார். தொடரில் 5 டெஸ்ட் போட்டிகள் விளையாடும் சீனியர் ஆண்கள் அணியில் கே.எல்.ராகுல் இருப்பதால், இந்த போட்டிகள் அவருக்கு விளையாடவும், பயிற்சி செய்யவும் தேவையான நேரத்தை வழங்கும்.” என்று தெரிவித்தது.

டெஸ்ட் போட்டிகளில் அனுபவம்:

கடந்த 2024 நவம்பர் முதல் 2025 ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர்-கவாஸ்கர் டிராபியில் கே.எல்.ராகுல் 2 அரைசதங்கள் உள்பட 255 ரன்கள் எடுத்திருந்தார். கே.எல். ராகுல் இந்தியாவுக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8 சதங்கள் மற்றும் 17 அரைசதங்களுடன் 3257 ரன்கள் எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கே.எல்.ராகுலின் அதிகபட்ச ஸ்கோர் 199 ரன்கள் ஆகும்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.