AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bumrah’s Future Uncertain: குடும்பமே முக்கியம்! ஓய்வு குறித்து சூசகமாக பேசிய பும்ரா.. அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்..!

Jasprit Bumrah's Retirement Speculation: இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னர், ஜஸ்பிரிட் பும்ராவின் ஓய்வு குறித்த சந்தேகங்கள் அதிகரித்துள்ளன. உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பும்ரா, தனது ஓய்வு குறித்து சூசகமாக பேசியுள்ளார். குடும்பமே தனக்கு முக்கியம் எனவும், உடல் தாங்காதபோது ஓய்வு எடுப்பார் எனவும் கூறியுள்ளார்.

Bumrah’s Future Uncertain: குடும்பமே முக்கியம்! ஓய்வு குறித்து சூசகமாக பேசிய பும்ரா.. அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்..!
ஜஸ்பிரித் பும்ராImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 May 2025 21:20 PM IST

வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி முதல் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் (India vs England Test Series) கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இது 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இந்திய அணியின் முதல் சுழற்சி போட்டி தொடராகும். இந்த தொடர் தொடங்குவதற்கு முன், ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி போன்ற 2 பெரிய ஜாம்பவான்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தங்களது ஓய்வை அறிவித்தனர். அதேநேரத்தில், இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) போன்ற அனுபவ வீரர்களே இடம்பெற்றுள்ளனர். இந்தநிலையில், பும்ரா உடற்தகுதி பிரச்சனைகள் காரணமக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பும்ரா தனது ஓய்வு குறித்தும் சூசகமாக தெரிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓய்வை அறிவிக்கிறாரா பும்ரா..?

முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க்குடன் 23 பாட்காஸ்டில் பும்ரா பேசினார். அப்போது பேசிய அவர், “எந்தவொரு தனிநபரும் இவ்வளவு காலமாக எல்லாவற்றையும் தொடர்ந்து விளையாடுவது என்பது கடினம். நான் இதை சிறிது காலமாக தொடர்ந்து செய்து வருகிறேன். ஆனால் இறுதியில் உங்கள் உடல் எவ்வளவு தாக்கு பிடிக்கிறது, முக்கியமான போட்டிகள் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே உங்கள் உடலை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதில் நீங்கள் கொஞ்சம் தேர்ந்தெடுத்து புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். ஒரு கிரிக்கெட் வீரராக, நான் எதையும் விட்டுவிட்டு எப்போதும் தொடர்ந்து விளையாட விரும்ப மாட்டேன்.

இந்த நேரத்தில், நான் நன்றாக இருக்கிறேன். ஆனால், நான் இருக்க வேண்டிய எண் (நம்பர் 1) இதுதான் என்று எந்தவொரு இலக்குகளை நிர்ணயிப்பது இல்லை. என் பயணம் இதுவரை நன்றாக செல்கிறது. என் உந்துதல் போய்விட்டது, என்னிடம் முயற்சி இல்லை, என் உடல் நிலைத்து நிற்கவில்லை என்பதை நான் உணரும் நாளில், ஓய்வு முடிவெடுக்கும் நேரம் அதுதான்” என்றார்.

குடும்பமே முக்கியம் – பும்ரா

தொடர்ந்து பேசிய பும்ரா, “எனக்கு, என் வாழ்க்கையை விட என் குடும்பம் மிகவும் முக்கியமானது, ஏனென்றால் அது என்றென்றும் இருக்கும். நான் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் இரண்டு விஷயங்கள் உள்ளன – ஒன்று என் குடும்பம், மற்றொன்று என் விளையாட்டு. ஆனால் குடும்பம் முதலில் வருகிறது.” என்றார்.

பும்ராவின் இந்த கருத்துகள் மூலம், விரைவில் சில முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று தோன்றுகிறது. ஆனால், கேள்வி என்னவென்றால், டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் எதிலிருந்து முதலில் ஓய்வை அறிவிப்பார் என்று தெரியவில்லை. பும்ராவின் தற்போதைய கவனம் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்வதிலும், அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை தக்கவைத்துக்கொள்வதிலும் இருக்கும். அதன் பிறகு பும்ரா ஏதேனும் ஒரு வடிவத்தில் இருந்து தனது ஓய்வை அறிவிக்கலாம்.

Follow Us