Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

RCB vs PBKS IPL 2025 Final Live Streaming: முதல் முறையாக கோப்பை யாருக்கு..? மோதும் பஞ்சாப் – பெங்களூரு! போட்டியை எங்கு, எப்போது காணலாம்?

Watch IPL 2025 Final Royal Challengers Bengaluru Vs Punjab Kings Live: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி ஜூன் 3 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் RCB மற்றும் PBKS அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானது. இரு அணிகளின் பிளேயிங் லெவன்கள், வானிலை முன்னறிவிப்பு மற்றும் போட்டியை எங்கு, எப்படி காண்பது என்பது குறித்த முழுமையான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இரு அணிகளும் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல போராடுகின்றன.

RCB vs PBKS IPL 2025 Final Live Streaming: முதல் முறையாக கோப்பை யாருக்கு..? மோதும் பஞ்சாப் – பெங்களூரு! போட்டியை எங்கு, எப்போது காணலாம்?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs பஞ்சாப் கிங்ஸ்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Jun 2025 07:34 AM

2025 ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிகளுக்கு இடையே ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி (IPL Final) நடைபெற உள்ளது. இந்த இரண்டு அணிகளும் இதுவரை ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை. எனவே 18 ஆண்டுகால வரலாற்றில், புதியதொரு 8வது அணி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது உறுதி. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட், போட்டியை எங்கு, எப்போது காண்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. இங்கு சமீபத்தில் நடைபெற்ற மும்பை – பஞ்சாப் இடையிலான குவாலிஃபையர் 2ல் இங்கு மொத்தமாக 410 ரன்கள் குவிக்கப்பட்டது. ஐபிஎல் 2025 சீசனை பொறுத்தவரை இந்த ஸ்டேடியத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிக்கு சாதகமாக உள்ளது. நடப்பு 2025 ஐபிஎல் சீசனில் இங்கு விளையாடிய 8 போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்யும் அணி 6 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த மைதானத்தில் அதிக ஸ்கோரை அடித்த அணி பஞ்சாப் கிங்ஸ் அணியாகும். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி 243 ரன்களை பதிவு செய்தது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:

விராட் கோலி , பிலிப் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், சுயாஷ் சர்மா

பஞ்சாப் கிங்ஸ்:

பிரியான்ஷ் ஆர்யா, ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹால் வதேரா, மார்கஸ் ஸ்டோனிஸ், ஷஷாங்க் சிங், அஸ்மதுல்லா உமர்சாய், கைல் ஜேமிசன், விஜய்குமார் வைஷாக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

வானிலை எப்படி..?

2025 ஜூன் 3ம் தேதி போட்டி நடைபெறும் நாளில் அகமதாபாத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, பட்டப் போட்டி நடைபெறும் நாளில் மேகமூட்டமான வானிலையுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும், இறுதிப் போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாள் வைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 பைனல்: ஆர்சிபி மற்றும் பஞ்சாப் இடையேயான போட்டியை எந்த சேனலில் காணலாம்..?

ஐபிஎல் 2025 பைனலில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் இடையேயான போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் கண்டுகளிக்கலாம்.

ஐபிஎல் 2025 பைனல்: ஆர்சிபி மற்றும் பஞ்சாப் இடையேயான போட்டியை எந்த ஓடிடி தளத்தில் நேரடியாக பார்க்கலாம்.?

ஐபிஎல் 2025 இல் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டியை ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஆன்லைன் மூலம் சந்தாகாரர்கள் நேரடியாக கண்டு ரசிக்கலாம்.