AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2025 Finals: ஐபிஎல் பைனலில் மழை அச்சுறுத்தல்.. ரத்தாக வாய்ப்பா..? யாருக்கு சாம்பியன் பட்டம்..?

RCB vs PBKS: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி ஜூன் 3 அன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான இந்தப் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் உள்ளது. ரிசர்வ் நாள் ஜூன் 4 ஆக ஒதுக்கப்பட்டுள்ளது. மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால், லீக் ஸ்டேஜ் புள்ளிகள் அடிப்படையில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெறும். இது இரண்டு அணிகளுக்கும் முதல் ஐபிஎல் சாம்பியன் பட்டமாக அமையும்.

IPL 2025 Finals: ஐபிஎல் பைனலில் மழை அச்சுறுத்தல்.. ரத்தாக வாய்ப்பா..? யாருக்கு சாம்பியன் பட்டம்..?
ரஜத் படிதார் Vs ஷ்ரேயாஸ் ஐயர்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Jun 2025 19:35 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் 2025ன் (IPL 2025) இறுதிப்போட்டி 2025 ஜூன் 3ம் தேதியான நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இரு அணிகளுக்கு ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை வெல்லாத காரணத்தினால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. இருப்பினும், இறுதிப்போட்டி நடைபெறும் நாளான 2025 ஜூன் 3ம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, போட்டியில் தடை ஏற்படலாம் என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தநிலையில், போட்டி ரத்து செய்யப்பட்டால் சாம்பியன் பட்டம் யாருக்கு வழங்கப்படும் உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

வானிலை அப்டேட்:

2025 ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தில் மழை பெய்ய சுமார் 62 சதவீதம் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் வெப்பநிலையானது 27 டிகிரி செல்சியஸ் முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும், காற்றின் வேகமானது மணிக்கு 16 கிமீ வேகத்திலும், ஈரப்பதம் சுமார் 45 சதவீதமாகவும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்றாலும், திடீர் மழையால் போட்டியானது அடிக்கடி தடைப்படலாம்.

ரிசர்வ் நாள் உண்டா..?

கடந்த 2023, 2024 ஆண்டுகளை போலவும் இந்த 2025ம் ஆண்டும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு ஒரு ரிசர்வ் நாளை ஒதுக்கியுள்ளது. அதன்படி, 2025 ஜூன் 3ம் தேதி மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டால், மீண்டும் போட்டியை முடிக்க 2 மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும். அதேபோல், போட்டியின் முடிவை தெரிந்துகொள்ள, டக் வொர்த் லூயிஸ் விதிகளின்படி, ஒரு அணி குறைந்தது 5 ஓவர்களாவது விளையாடிருக்க வேண்டும். இருப்பினும், முதல் எந்த முடிவும் எட்டவில்லை என்றால், ரிசர்வ் நாள் 2025, ஜூன் 4ம் தேதி அறிவிக்கப்படும்.

இறுதிப்போட்டி கைவிடப்பட்டால் யார் வெற்றி பெறுவார்கள்..?

2025 ஜூன் 3 மற்றும் ஜூன் 4ம் தேதிய தேதிகளில் (ரிசர்வ் டே) மழையால் போட்டி நடைபெறாமல் போனால், லீக் ஸ்டேஜில் புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்கள். பிசிசிஐ இந்த முடிவை கையில் எடுத்தால், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததால் சாம்பியன்களாக அறிவிக்கப்படும். ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லீக் ஸ்டேஜில் 2வது இடத்தை பிடித்தது.

புதிய வரலாறு:

கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது முதலே பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. அதன்படி, இரு அணிகளின் ஒரு அணி சாம்பியன் பட்டத்தை முடிசூடுவார்கள். மழை ஏதேனும் இறுக்கிட்டால் பஞ்சாப் கிங்ஸ் அணிதான் சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

Follow Us