Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025 Final: பஞ்சாப் அணிக்கு ராசியாக அகமதாபாத் ஸ்டேடியம்.. தலையெழுத்தை மாற்றுமா பெங்களூரு? புள்ளி விவரங்கள் சொல்வது என்ன..?

Royal Challengers Bengaluru vs Punjab Kings: ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இரண்டு அணிகளுக்கும் முக்கியமானது. RCB அகமதாபாத்தில் கலவையான சாதனைகளைப் பதிவு செய்துள்ளது, அதேசமயம் PBKS சிறப்பான வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளது.

IPL 2025 Final: பஞ்சாப் அணிக்கு ராசியாக அகமதாபாத் ஸ்டேடியம்.. தலையெழுத்தை மாற்றுமா பெங்களூரு? புள்ளி விவரங்கள் சொல்வது என்ன..?
ஷ்ரேயாஸ் ஐயர் - ரஜத் படிதார்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Jun 2025 14:54 PM

இந்தியன் பிரீமியர் லீக் 2025ன் (IPL 2025) பிரமாண்டமான இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் (Royal Challengers Bengaluru) பஞ்சாப் கிங்ஸ் அணியும் (Punjab Kings) இன்று அதாவது 2025 ஜூன் 3ம் தேதி மோதுகிறது. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் கடந்த 17 ஆண்டுகளாக ஐபிஎல் கோப்பையை வெல்ல வேண்டும் என்று போராடுகிறது. இந்தநிலையில், போட்டி நடைபெறும் அகமதாபாத் எந்த அணிக்கு இதுவரை சாதகமாக அமைந்துள்ளது என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

பஞ்சாப் கிங்ஸ் அணி :

ஐபிஎல் 2025ல் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, குவாலிபையர் 1ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோற்றது. அதன்பிறகு, எலிமினேட்டரில் வெற்றி பெற்று வந்த மும்பை இந்தியன்ஸ் அணியை குவாலிபையர் 2ல் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. குவாலிபையர் 2ல் அகமதாபாத் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 203 ரன்கள் என்ற ஸ்கோரை துரத்தி சிறப்பான ரன் சேஸிங்கை மேற்கொண்டது பஞ்சாப் கிங்ஸ்.

ஐபிஎல் வரலாற்றில் மும்பை அணிக்கு எதிராக எந்தவொரு அணியும் 200+ ரன்களை வெற்றிகரமாக துரத்தியது இதுவே முதல் முறை. பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 49 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து, மும்பை அணிக்கு தோல்வியையும், பெங்களூரு அணிக்கு எச்சரிக்கையையும் விடுத்தார்.

நரேந்திர மோடி ஸ்டேடியம் பெங்களூரு அணிக்கு எப்படி..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த காலங்களில் அகமதாபாத்தில் கலவையான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. பெங்களூரு அணி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி, 3 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளை பதிவு செய்துள்ளன. அதேநேரத்தில், நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இந்த சாதனைகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பின்னடைவாக அமையலாம்.

அதேபோல், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 7 போட்டிகளில் விளையாடி பஞ்சாப் அணி 5ல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இன்றைய போட்டியில் களமிறங்குவதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (ஆர்சிபி) நான்காவது ஐபிஎல் இறுதிப் போட்டியாகும். ஆனால், இதுவரை ஒரு முறை கூட கோப்பையை வென்றதில்லை.

பெங்களூரு அணியின் இறுதிப்போட்டி வரலாறு:

  • ஐபிஎல் 2009 பைனல் – டெக்கான் சார்ஜர்ஸிடம் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
  • ஐபிஎல் 2011 பைனல் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
  • ஐபிஎல் 2016 பைனல் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

பஞ்சாப் அணியின் இறுதிப்போட்டி வரலாறு:

  • ஐபிஎல் 2014 பைனல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது பஞ்சாப் கிங்ஸ்.