Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025 Final: 18 ஆண்டுகள் காத்திருப்பு..! கோப்பையை ஏந்திய ஆர்சிபி… ஆனந்த கண்ணீர் வடித்த விராட் கோலி!

RCB Wins IPL 2025: ஐபிஎல் 2025 இறுதிப்போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. பெங்களூரு அணி 190 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி இலக்கை துரத்தியபோது, தொடக்க வீரர்களின் சொதப்பல் மற்றும் மத்திய வரிசையின் மந்தமான ஆட்டம் காரணமாக இலக்கை எட்ட முடியாமல் போனது. ஷஷாங்க் சிங் மட்டும் சிறப்பாக விளையாடினார்.

IPL 2025 Final: 18 ஆண்டுகள் காத்திருப்பு..! கோப்பையை ஏந்திய ஆர்சிபி… ஆனந்த கண்ணீர் வடித்த விராட் கோலி!
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 03 Jun 2025 23:37 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனின் இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2025 ஜூன் 3ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மோதியது.. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு வெறும் 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 18 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றது.

191 ரன்கள் இலக்கு:

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரியான்ஷ் ஆர்யா மற்றும் ப்ரப்சிம்ரன் சிங் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் இணைந்து சிறப்பான தொடக்கம் தந்து 43 ரன்களை எடுத்தனர். 19 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து பிரியான்ஷ் ஆர்யா ஆட்டமிழந்தார். தொடர்ந்து, 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த ப்ரப்சிம்ரன் சிங் ஏமாற்றம் அளித்தார். கடந்த போட்டியில் ஆட்ட நாயகனாக திகழ்ந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் வெறும் 1 ரன்கள் ஆட்டமிழந்தார்.

பின் வரிசை வீரர்கள் சொதப்பல்:

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் கிங்ஸ் அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்திருந்தது. ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிங்ஸ் 23 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் உதவியுடன் 39 ரன்கள் எடுத்தார். வழக்கமாக அதிரடியாக ஆடும் நேஹல் வதேரா வழக்கத்திற்கு மாறாக 18 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, உள்ளே வந்த மார்கஸ் ஸ்டோனிஸ் 2 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்து ஆட்டமிழந்தார். அப்போதே கிட்டத்தட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி உறுதியானது.

கோப்பையை ஏந்திய ஆர்சிபி:

தொடர்ந்து, அகமதுல்லா ஓமர்சாஉ 2 பந்துகளில் 1 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் ஷஷாங்க் சிங் மட்டும் தனி ஆளாக பவுண்டரி சிக்ஸருமாக அடித்தார். 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உதவியுடன் ஷஷாங்க் சிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவர் வீசிய ஹசல்வுட் பந்தில் ஷஷாங்க் சிங் 24 ரன்கள் எடுத்தால், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு போதவில்லை. இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 18 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக கோப்பையை ஏந்தியது.