Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025 Final: 3 விக்கெட்டுகளுடன் 3 ரன்கள் மட்டுமே! கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த அர்ஷ்தீப் சிங்..

Arshdeep Singh: ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 190 ரன்கள் எடுத்தது. அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, பெங்களூரு அணியின் ஸ்கோரை 190ல் நிறுத்தினார். அவரது சிறப்பான பந்துவீச்சு பஞ்சாப் கிங்ஸின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இறுதிப் போட்டியில் அர்ஷ்தீப் சிங் 21 விக்கெட்டுகளுடன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது வீரராகவும் சாதனை படைத்தார்.

IPL 2025 Final: 3 விக்கெட்டுகளுடன் 3 ரன்கள் மட்டுமே! கடைசி ஓவரில் விஸ்வரூபம் எடுத்த அர்ஷ்தீப் சிங்..
அர்ஷ்தீப் சிங்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Jun 2025 22:42 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) இறுதிப் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது. ஆரம்பம் முதலே சிறப்பாக பந்துவீசிய ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிக்கு 191 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் ஆர்சிபி 3 ரன்கள் மட்டுமே எடுக்க எடுத்தது. இது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பின்னடைவை தருமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும். கடைசி ஓவரை வீசிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்தார். இதனால், பெங்களூர் அணி 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஆரம்பத்தில் சொதப்பிய அர்ஷ்தீப் சிங்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக ஆரம்ப கட்டத்தில் பந்து வீசிய அர்ஷ்தீப் சிங் 3 ஓவர்களில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அப்போது அவரால் ஒரு விக்கெட் கூட எடுக்க முடியவில்லை. ஆனால், கடைசி ஓவரான 20வது ஓவரில், அர்ஷ்தீப் சிங் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தக்க பதிலடி கொடுத்தார். 19 ஓவரின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஸ்கோர் 187 ரன்களை எடுத்திருந்தது. இதனால், கடைசி ஓவரில் ஆர்சிபி அணி 200 ஐ தாண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதன்பிறகு, விஸ்பரூபம் எடுத்த அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் வெறும் 3 விக்கெட்டுகளை எடுத்தது மட்டுமின்றி, 3 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்தார். இதனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 190 ரன்களை மட்டுமே எடுத்தது.

ரொமாரியோ, க்ருனால், புவனேஷ்வர் குமார் ஆகியோர் ஆட்டமிழப்பு:

அர்ஷ்தீப் சிங்கின் ஓவர் ஒரு சிங்கிளுடன் தொடங்கியது. அடுத்த பந்தில், அவர் ரொமாரியோ ஷெப்பர்டை 17 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார். இந்த பந்தில் பேட்ஸ்மேன் டிஆர்எஸ் எடுத்தார், ஆனால் அது பலனளிக்கவில்லை. இதன் பிறகு, அர்ஷ்தீப் சிங் ஒரு ரன் விட்டுகொடுத்தார். நான்காவது பந்தில், க்ருணால் பாண்டியா 4 ரன்கள் மட்டுமே எடுத்து கேட்ச் அவுட் ஆனார். ஐந்தாவது பந்தில் ஒரு ரன் எடுத்த பிறகு, ஓவர் ஒரு விக்கெட்டுடன் முடிந்தது, புவனேஷ்வர் குமார் (1) கேட்ச் அவுட் ஆனார்.

ஐபிஎல் 2025 இல் அர்ஷ்தீப் சிங்கின் செயல்திறன்:

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய நான்காவது பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார். ஐபிஎல் 2025ல் 17 போட்டிகளில் மொத்தம் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கீழே உள்ள பட்டியல் பஞ்சாப் அணிக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் 5 பந்து வீச்சாளர்களின் சாதனைகளை இங்கே தெரிந்து கொள்வோம்.

  1. ஆண்ட்ரூ டை (2018) – 24 விக்கெட்டுகள்
  2. ஹர்ஷல் படேல் (2024)- 24 விக்கெட்டுகள்
  3. ககிசோ ரபாடா (2022)- 23 விக்கெட்டுகள்
  4. அர்ஷ்தீப் சிங் (2025) – 21 விக்கெட்டுகள்
  5. முகமது ஷமி (2020) – 20 விக்கெட்டுகள்

கலக்கிய பஞ்சாப் பந்துவீச்சாளர்கள்:

ஐபிஎல் 2025  இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக வைஷாக் விஜய் குமார் மிகவும் குறைந்த ரன்களை விட்டுகொடுத்த பந்துவீச்சாளராக மாறினார். வெறும் 4 ஓவர்களில் 7.50 எகானமியில் 30 ரன்கள் கொடுத்தார். அதேபோல், அசாம்துல்லா உமர்சாய் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்தார். இருவரும் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கைல் ஜேமீசன் 4 ஓவர்களில் 48 ரன்களுக்கு 3 விக்கெட்களையும், யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு 1 விக்கெட் வீழ்த்தினர்.