Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Virat Kohli Retirement: டெஸ்ட் ஓய்வை திரும்ப பெறுகிறாரா விராட் கோலி..? சமாதான முயற்சியில் பிசிசிஐ, ஐசிசி!

Indian Test Cricket's Future: விராட் கோலி 2025 மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது திடீர் முடிவுக்கு பின்னணியில் அழுத்தம் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமல், கோலியிடம் டெஸ்ட் ஓய்வை திரும்பப் பெற வேண்டுகோள் விடுத்தார். கோலியின் ஐபிஎல் ஃபார்ம் மற்றும் கிரிக்கெட் வளர்ச்சிக்காக இது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

Virat Kohli Retirement: டெஸ்ட் ஓய்வை திரும்ப பெறுகிறாரா விராட் கோலி..? சமாதான முயற்சியில் பிசிசிஐ, ஐசிசி!
விராட் கோலிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Jun 2025 18:57 PM

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) கடந்த 2025 மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது பலரை அதிர்ச்சியடைய செய்தது. இந்த திடீர் முடிவு காரணமாக கோலி இந்த முடிவை சொந்தமாக எடுத்தாரா அல்லது ஏதேனும் அழுத்ததின் கீழ் எடுத்தாரா என்று சிலர் இன்றுவரை கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக, இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளுக்கான (India vs England Test Series) 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தபோது தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் (Ajit Agarkar), 2025 ஏப்ரல் மாதத்திலேயே தனது ஓய்வை முடிவை தனக்கு தெரிவித்ததாக குறிப்பிட்டார். இந்தநிலையில், ஐபிஎல் தலைவர் அருண் சிங் துமல், தனது ஓய்வு முடிவை திரும்ப பெறவேண்டும் என்று விராட் கோலியிடம் சிறப்பு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

விராட் கோலியிடம் அருண் சிங் துமல் கோரிக்கை:

செய்தி நிறுவனமான பிடிஐயிடம் பேசிய அருண் சிங் துமல், “விராட் கோலி தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முழுநாடும் விரும்புகிறது. டெஸ்ட் ஓய்விலிருந்து விராட் கோலி திரும்ப பெற்று விளையாட வேண்டும் என்பது எனது விருப்பம். கோலி கிரிக்கெட்டின் மிகப்பெரிய தூதராக இருப்பதால், ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற மாட்டார் என்று நம்புகிறேன்.

விராட் தனது முதல் ஐபிஎல் சீசனில் இருந்ததை விட இன்று மிகவும் ஃபிட்டாக இருக்கிறார். ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றாலும், விராட் கோலி இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடர்ந்து விளையாட வேண்டும்” என்று தெரிவித்தார்.

இரண்டு வடிவங்களில் இருந்து ஓய்வு:

2024 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. இதன்பிறகு, விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து, ஐபிஎல் 2025 நடந்து கொண்டிருந்தபோது, 2025 மே 12ம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார். அதன்படி, விராட் கோலி தற்போது ஐபிஎல் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.