Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

துயரத்தில் முடிந்த ஆர்சிபியின் வெற்றிக்கொண்டாட்டம் – சின்னசாமி மைதானத்தில் உண்மையில் என்ன நடந்தது?

Bengaluru Stampede: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக அந்த அணி வீரர்கள் சின்னசாமி மைதானத்தில் நடந்த வெற்றி விழாவில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் சோக்ததை ஏற்படுத்தியிருக்கிறது.

துயரத்தில் முடிந்த ஆர்சிபியின் வெற்றிக்கொண்டாட்டம் – சின்னசாமி மைதானத்தில் உண்மையில் என்ன நடந்தது?
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jun 2025 23:17 PM

ஐபிஎல் 2025 (IPL) போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு  மாபெரும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றி கிடைத்து ஒரு நாள் கூட முழுவதுமாக முடிவடையாத நிலையில் மிகப்பெரும் சோக சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது. ஐபிஎல் வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடும் வகையில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் ஆர்சிபி அணி வீரர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர்.  ஒரு கட்டத்தில் கடுமையான கூட்டம் காரணமாக அங்கிருந்தவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இனி ஒவ்வொரு ஆண்டும் ஆர்சிபியின் வெற்றியை நினைவுகூறும் வேளையில் இந்த துயர சம்பவமும் ரசிகர்களின் நினைவுக்கு வரும்.

விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடு காரணமா?

முன்னதாக, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளைக் காரணம் காட்டி, வெற்றி அணிவகுப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. பின்னர் கொண்டாட்டங்களை சின்னசாமி மைதானத்திற்குள் மட்டும் நடத்த முடிவு செய்யப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்த நிலையில் பாதுகாப்புக்காக சுமார் 5,000 போலீசார் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடகா முதல்வர் விளக்கம்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களை சந்தித்து விக்கமளித்தார். அப்போது பேசிய அவர்,, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடிய வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. விதான் சௌதா முதல் சின்னசாமி ஸ்டேடியம் வரை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஒரே நேரத்தில் திரண்டனர். கூட்ட நெரிசல் போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க பேரணிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. வெற்றிக் கொண்டாட்ட பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், ஸ்டேடியம் முன் ரசிகர்கள் குவிந்தனர். இருப்பினும், ஸ்டேடிய வளாகத்தில் திரண்ட ரசிகர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, துயரச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்றார்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்

 

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாபெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்திருக்கிறார். மேலும காயமடைந்தவர்களுக்கு இலவ சிகிச்சையும் உரிய நிவாரணமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.