Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி தப்ப முடியாது.. சென்னையில் 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமிரா.. 10 நொடியில் நோட்டீஸ்..

ANPR Camera In Chennai: சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் வாகனங்களை கண்டுபிடிக்கும் வகையில் மேலும் 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமிராக்கள் பொறுத்தப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இனி தப்ப முடியாது.. சென்னையில் 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமிரா.. 10 நொடியில் நோட்டீஸ்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 10 Aug 2025 07:20 AM

சென்னை, ஆகஸ்ட் 10, 2025: சென்னையில் 169 இடங்களில் ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. சரிவர இயக்காத வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும் எனவும் சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். ஏ.என்.பி.ஆர் கேமரா என்பது ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் கேமராக்கள் ஆகும். இந்த கேமராக்கள் போக்குவரத்து விதிமீறல்களை கண்டறியவும் திருட்டு வாகனங்களை கண்டுபிடிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக சென்னையில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்க பல்வேறு இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் வாகனங்களை நம்பியே இருக்கின்றனர். ஆனால் அதனை முறையாக பராமரிக்கின்றனரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

ஏ.என்.பி.ஆர் கேமிராக்கள் – பயன் என்ன?

பொதுவாக சிக்னலில் நிறுத்தாமல் செல்லும் வாகனங்கள், அதிவேகமாக வாகனங்களை இயக்குவது ஸ்டாப் லைன் தாண்டி வாகனங்களை நிறுத்துவது போன்ற பல்வேறு விதிமுறைகளை ஈடுபடும் வாகனங்களை பிடிப்பது போக்குவரத்து துறையினருக்கு கடும் சவாலாக இருந்து வந்தது. இதனை சுலபமாக்கும் முறையில் போக்குவரத்து காவல்துறை தரப்பில் இந்த அதிநவீன ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டது. இந்த கேமராக்கள் மூலம் வண்டியின் பதிவு எண் துல்லியமாக தெரியும். அதிவேகமாக வாகனங்கள் இயக்கினாலும் நொடிப்பொழுதில் இந்த கேமராக்கள் வண்டியின் பதிவு எண்களை படம் பிடித்து அனுப்பக்கூடிய அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மகனை காப்பாற்ற கொலைக்கு பொறுப்பேற்ற தாய்.. விசாரணையில் வெளிவந்த உண்மை.. 3 பேர் கைது!

போக்குவரத்து விதிமீறல் – 10 நொடியில் நோட்டீஸ்:

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவரில் வாகன பதிவுகளை அந்த கேமரா உடனே படம் பிடித்து தேசிய தகவல் தொழில்நுட்பத்தின் சர்ருக்கு அனுப்பி சம்மந்தப்பட்ட வண்டி உரிமையாளரின் செல்போனுக்கு சுமார் பத்து நொடிகளில் குறுஞ்செய்தி வடிவில் நோட்டீஸ் அனுப்பும் வசதி கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிக்னலில் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் இல்லை என்றால் கூட விதிமீறல்கள் ஈடுபடுபவரை துல்லியமாக கண்டுபிடிக்க இது பெரும் பங்களிக்கிறது.

மேலும் படிக்க: சென்னை மக்களே அலர்ட்… முக்கிய ரூட்டில் மின்சார ரயில்கள் ரத்து.. எங்கு?

கூடுதல் வசதியாக இந்த கேமராக்களில் நைட் விஷன் வசதியும் இருக்கிறது. எனவே இரவு நேரங்களிலும் இந்த கேமராக்கள் மூலம் வாகனங்களின் பதிவு எண்கள் தெளிவாக பதிவு செய்ய முடியும். போக்குவரத்து விதிமீறல்கள் மட்டுமல்லாமல் திருட்டு வாகனங்கள் அதே போல் குற்றவாளியை பிடிப்பதற்காகவும் இந்த கேமராக்கள் உதவுகின்றன.

169 இடங்களில் பொறுத்தப்படும் ஏ.என்.பி.ஆர் கேமிரா:

அந்த வகையில் சென்னையில் ஏற்கனவே இந்த ஏ.என்.பி.ஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கும் நிலையில் சென்னையில் மேலும் 169 இடங்களில் இந்த கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற்று வருவதாகவும் சரிவர இயக்காத வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.