மகனை காப்பாற்ற கொலைக்கு பொறுப்பேற்ற தாய்.. விசாரணையில் வெளிவந்த உண்மை.. 3 பேர் கைது!
Chennai Crime News : சென்னையில் மகனின் கொலைக்கு பொறுப்பேற்று தாய் வடபழனி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். விசாரணையில், 19 வயதான இளைஞர் முகிலை, அவரது அண்ணன் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கு உதவியதாக, தாய், சகோதரர், அவரது நண்பர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, ஆகஸ்ட் 10 : சென்னை சூளைமேட்டில் 19 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் தாயை தாக்கியதல், தம்பியை கொலை செய்ததாக அண்ணா வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து, அவர் கைதாகி உள்ளார். மகனை கொலை செய்ததாக தாய் பிரமிளா சரணடைந்த நிலையில், போலீஸ் விசாரணையில் அண்ணன் ராஜபிரபா கைதாகி உள்ளார். சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பிரமிளா (47). இவரது கணவர் ராமசந்திரன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனால், வாடகை வீட்டில் தனது மூன்று மகன்களுடன் பிரமிளா வசித்து வருகிறார். இதில், பிரமிளாவின் இளைய மகன் முகில் (19). இவர் கூலி வேலை செய்து வந்தார். அதே நேரத்தில் மது போதைக்கு அடிமையானவர். இவர் தாய் பிரமிளாவிடம் மதுபோதையில் அடிக்கடி சண்டையிட்டு, அவரை துன்புறுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மதுபோதையில் கொலை செய்துவிடுவேன் எனவும் முகில், பிரமிளாவை மிரட்டியும் வந்துள்ளார். இதனால், பிரிமிளா தினமும் அச்சத்திலேயே இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான நேற்று காலை 6.30 மணியளவில் பிரமிளா வடபழனி காவல் நிலையத்திற்குச் சென்று, தனது இளைய மகன் தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியதால் தான் அவரைக் கொன்றதாகக் கூறி சரணடைந்தார். இதனை அடுத்து, போலீசார் பிரமிளாவை கைது செய்தனர். அதோடு, வடபழனி போலீசார் அவரது வீட்டிற்கு சென்று முகிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.




Also Read : வீட்டு சாவி இல்ல.. இளைஞர் எடுத்த விபரீத முயற்சி.. பறிபோன உயிர்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி
மகனை காப்பாற்ற கொலைக்கு பொறுப்பேற்ற தாய்
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முகில் மீது இருக்கும் வெட்டுக் காயத்தின் ஆழத்தை பார்த்தபோது, கொலை செய்தது யார் என சந்தேகம் எழுந்தது. இதனை அடுத்து, போலீசார் அண்ணா ராஜாபிரபுவிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, தாய் பிரமிளாவை தொடர்ந்து துன்புறுத்தி வந்ததால், ஆத்திரத்தில் அண்ணன் ராஜாபிரவு தனது நண்பர் கண்ணனுடன் சேர்ந்து, முகிலை கொலை செய்துள்ளனர்.
Also Read : மதுபான கடையில் தொடர் கொள்ளை.. காரணம் கேட்டு ஷாக்கான போலீசார்!
இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், உறுதி செய்யப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர். மகனை காப்பாற்றுவதற்காக கொலைக்கு பொறுப்பேற்றதாகவும் தாய் கூறியுள்ளார். இதனை அடுத்து, தாய் பிரமிளா, அண்ணன் ராஜாபிரவு, அவரது நண்பரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகில் மீது ஏற்கனவே கொலை முயற்சி, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.