திருப்பூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்.. பயணத்திட்டம் என்ன?
CM MK Stalin: ஆகஸ்ட் 10, 2025 தேதியான இன்று மாலை கோவை செல்லும் முதல்வர் ஸ்டாலின், அங்கிருந்து கார் மூலம் திருப்பூர் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு நாளை (ஆகஸ்ட் 11, 2025) பொள்ளாச்சியில் காமராஜர் சிலை திறந்து வைக்கிறார்.

சென்னை, ஆகஸ்ட் 10, 2025: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 10 2025 தேதியான இன்று கோவை மாவட்டத்திற்கு செல்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டு அங்கு இருக்கக்கூடிய மக்களுடன் சாலை வளம் நடத்தி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றிருந்தார். அங்கு வியட்நாம் கார் தொழிற்சாலையான வின்ஃபாஸ்ட் தொழிற்சாலையை திறந்து வைத்து முதல் காரையும் விற்பனைக்கு தொடங்கி வைத்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கக்கூடிய நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்டம் தோறும் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று கோவை செல்கிறார். இதற்கு முன்னதாக கடந்த 2025 ஜூலை மாதம் 22 மற்றும் 23ஆம் தேதி கோவை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருந்தார்.
சாலை மார்கமாக திருப்பூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின்:
அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே சென்னை கிரீம்ஸ் ரோட்டில் இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமார் ஒரு வார காலம் தங்கியிருந்த நிலையில் ஆகஸ்ட் 1 2025 ஆம் தேதி முதல் மீண்டும் அரசு பணிகளை மேற்கொள்ள தொடங்கினார். கடந்த வாரம் தூத்துக்குடிக்கு சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று மாலை தனி விமானம் மூலம் கோவைக்கு புறப்பட்டு செல்கிறார். கோவை விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் சென்றடைகிறார். அங்கு இரவு எட்டு மணி அளவில் உடுமலைப்பேட்டையில் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
மேலும் படிக்க: மீண்டும் கூட்டணியா? ஓபிஎஸ்-ஐ மீண்டும் சேர்க்க பாஜக திட்டம்.. இன்று முக்கிய மீட்டிங்!
பொள்ளாச்சியில் காமராஜர் சிலை திறப்பு:
பின்னர் ஆகஸ்ட் 11 2025 தேவையான நாளை காலை 10 மணி அளவில் உடுமலை நேதாஜி மைதானத்தில் நடக்கக்கூடிய அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்கள் மத்தியில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து 12 மணி அளவில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பொள்ளாச்சிக்கு வருகை தந்து அங்கு காமராஜர், சுப்பிரமணியன், மகாலிங்கம் ஆகிய தலைவர்களின் திருவுருவர் சிலையை திறந்து வைக்கிறார்.
மேலும் படிக்க: சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. விரக்தியுடன் பதிலளித்த நிறுவனர் ராமதாஸ்..
அதனைத் தொடர்ந்து வி கே பழனிசாமி அரங்கத்தினை திறந்து வைத்து ஆழியாறு பாசன திட்ட பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி மற்றும் திட்டத்தின் மாதிரி வடிவத்தை பார்வையிடுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நண்பகல் 12 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து கார் மூலம் கோவை புறப்பட்டு வந்து அங்கிருந்து விமான மூலம் மீண்டும் சென்னை தரும்புகிறார்.