Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. விரக்தியுடன் பதிலளித்த நிறுவனர் ராமதாஸ்..

Ramadoss Vs Anbumani: அன்புமணி தலைமையில் ஆகஸ்ட் 9, 2025 அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் அன்புமணியில் தலைவர் பதவிக்காலம் மேலும் ஒரு ஆண்டுகாலம் நீடித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை என கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சொல்வதற்கு ஒன்றும் இல்லை.. விரக்தியுடன் பதிலளித்த நிறுவனர் ராமதாஸ்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 10 Aug 2025 06:45 AM

பாட்டாளி மக்கள் கட்சி, ஆகஸ்ட் 10, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் அன்புமணி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் குறித்து கட்சி நிறுவனர் ராமதாஸ் குறிப்பிடுகையில், சொல்வதற்கு ஒன்றுமில்லை என விரக்தியுடன் குறிப்பிட்ட பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை மகன் அன்புமணி மற்றும் தந்தை ராமதாஸ் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக இரண்டு பேருமே கட்சி நடவடிக்கைகளை தனித்தனியாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அன்புமணி தரப்பில், ராமதாஸ் ஆதரவாளர்களை நீக்கியும் புதிய உறுப்பினர்களை சேர்த்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் ராமதாஸ் தரப்பில், அன்புமணியை பதவியில் இருந்து நீக்கியும் அன்புமணியின் ஆதரவாளர்களை பொறுப்பிலிருந்து நீக்கியும் புதிய பொதுக்குழு உறுப்பினர்களை நியமித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

திமுகவை விமர்சிக்கும் அன்புமணி:

அதேபோல் அன்புமணி ராமதாஸ் மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ராமதாஸ் தைலாபுரம் இல்லத்தில் கட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அன்புமணியை பொறுத்தவரையில் ஆளும் திமுக அரசை கண்டித்து விமர்சனங்களை முன்வைத்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

Also Read: பாமக யாருடன் கூட்டணி? பொதுக்குழு மேடையிலேயே சொன்ன அன்புமணி!

இந்த நிலையில் ஆகஸ்ட் 9 2025 தேதி ஆன நேற்று மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய கான்ப்ளூயன்ஸ் அரங்கில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டமானது நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டம் நடத்த தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ் தலைமையில் உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அந்த மனு விசாரணையின் போது அன்புமணி பொதுக்குழுவை நடத்த தடையில்லை என்றும் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த பொதுக்குழு கூட்டமானது நடைபெற்றது.

அன்புமணி தலைவர் பதவிக்காலம் நீடித்து தீர்மானம்:

இந்த பொதுகுழுவில் அன்புமணியின் தலைவர் பதவி மேலும் ஒரு ஆண்டு காலம் நீடிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல அன்புமணி இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் அப்போது, “சாமிக்கு கோபம் வரும் என்றும் அதனை தணிப்பதற்காக மக்கள் ஆகிய நாம் காவடி எடுத்தும் தீ மிதித்தும் திருவிழாக்களை நடத்தியும் வருவோம். இதில் பிரச்சனை சாமி கிடையாது பூசாரி தான் என சூசகமாக பேசி இருந்தார்.

Also Read:  எம்ஜிஆர், ஜெயலிதா குறித்து அவதூறாக பேசினேனா..? திருமாவளவன் விளக்கம்..!

சொல்வதற்கு ஒன்றும் இல்லை – ராமதாஸ்

இதற்கிடையில் பிற்பகல் பூம்புகார் நகரில் நடைபெறும் மகளிர் மாநாட்டிற்கு புறப்பட்ட கட்சி நிறுவனர் ராமதாஸ் இடம் செய்தியாளர்கள், அன்புமணி நடத்தும் பொதுக்குழு கூட்டம் தொடர்பாக கேள்விகளை எழுப்பினர். அப்போது பேசிய அவர், “ சொல்வதற்கு ஒன்றுமில்லை, பூம்புகாரில் நடக்கும் மாநாட்டிற்கு வாருங்கள் வேறொன்றும் சொல்வதற்கு இல்லை” என விரக்தியுடன் பேசிச் சென்றார்