Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீக் எண்டில் ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா?

TNSTC Special Buses : சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பெங்களூரு, கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீக் எண்டில் ஊருக்கு போறீங்களா? சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. எங்கெல்லாம் தெரியுமா?
சிறப்பு பேருந்துகள்
Umabarkavi K
Umabarkavi K | Published: 06 Aug 2025 06:27 AM

சென்னை, ஆகஸ்ட் 06 : வார இறுதி நாட்களையொட்டி, போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் (TNSTC Special Buses) இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது போக்குவரத்து சேவை. போக்குவரத்து சேவை அனைத்து திறக்கும் மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பண்டிகை நாட்கள் விடுமுறை நாட்கள் பேருந்து பயணிகளின் கூட்டும் அதிகமாக இருக்கும் இதனால் பயணிகளின் சிரமத்தை குறைக்க சிறப்பு பரிசினை தமிழக போக்குவரத்து கழகம் இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இது குறித்து  போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிவிப்பில், 2025 ஆகஸ்ட் 8 ஆம் தேதியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்பத்தூர், சேலம், ஈரோடு ஆகிய இடங்களுக்கு 340 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Also Read: 90’s வைபுக்கு ரெடியாகுங்க.. சென்னைக்கு மீண்டும் வருகிறது டபுள் டக்கர் பஸ்.. எந்த ரூட்ல தெரியுமா?

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மேலும், 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 55 பேருந்துகளும், 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதி 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. அதோடு பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கத் திட்டம் இடப்பட்டுள்ளது.

Also Read : ஓணம் பண்டிகை.. சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்.. நோட் பண்ணுங்க பயணிகளே!

மேலும் மாதவரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு 40 பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊரிகளிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலும் சிறப்பு பரிசில் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.  பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், தங்களது பயண டிக்கெட்டை TNSTC இணையதளம் அல்லம் மொபைல் அப் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.