Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

23 வயது இளைஞரை கொலை செய்த 16 வயது வடமாநில சிறுமி.. பகீர் சம்பவம்!

23 Years Old Man Killed | திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 23 வயது இளைஞரை 16 வயது வடமாநில சிறுமி அடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

23 வயது இளைஞரை கொலை செய்த 16 வயது வடமாநில சிறுமி.. பகீர் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Aug 2025 09:02 AM

திண்டுக்கல், ஆகஸ்ட் 12 : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த 23 வயது இளைஞர், 16 வயது வடமாநில சிறுமியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அது குறித்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இளைஞரை வடமாநில சிறுமி கொலை செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வேலைக்கு சென்ற இளைஞர் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த குடும்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தும்பலபட்டி கிராமத்தில் செங்கல் சூளை ஒன்று அமைந்துள்ளது. இந்த சூலையில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்ற 23 வயது இளைஞர் கணக்காளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற அவர் காலை வரை வீடு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் செங்கல் சூளைக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சரவணன் காதில் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : மாணவிக்கு பாலியல் தொல்லை – ஜூடோ பயிற்சியாளர் குற்றவாளி என தீர்ப்பு

அடித்து கொலை செய்யப்பட்ட சரவணன்

தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்குப் பிறந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடங்கிய நிலையில் சரவணன் அடித்த கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கிய நிலையில் சரவணன் கொலை செய்தது அதே செங்கல் சூளையில் வேலை செய்து வந்த 16 வயதான வடமாநில சிறுமி என்பது தெரிய வந்தது.

இதையும் படிங்க : Online Gambling: ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் தற்கொலை.. ஐடி ஊழியரின் சோக முடிவு!

கொலைக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் குடும்பம்

சிறுமி தனது தந்தையுடன் செங்கல் சூளையில் பணியாற்றி வந்த நிலையில் அவர் சரவணனை கொலை செய்ததை மறைக்க தந்தை கோபால் மற்றும் 14 வயது சகோதரி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த நிலையில் கோபால் மற்றும் அவரது இரண்டு மகள்களை கைது செய்த போலீஸா அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியாமல் இருந்து குறிப்பிடத்தக்கது.