Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாணவிக்கு பாலியல் தொல்லை – ஜூடோ பயிற்சியாளர் குற்றவாளி என தீர்ப்பு

Judo Master Kebiraj Convicted: மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் ஜூடோ பயிற்சியாளர் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட இந்த புகாரில் கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மாணவிக்கு பாலியல் தொல்லை  – ஜூடோ பயிற்சியாளர் குற்றவாளி என தீர்ப்பு
குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட கெபிராஜ்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Aug 2025 18:44 PM

கடந்த 2021 ஆம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் செய்யப்பட்ட ஜூடோ (Judo) மாஸ்டர் கெபிராஜ் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மாணவர் ஒருவருக்கு ஜூடோ பயிற்சி அளித்த கெபிராஜ் என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் செய்யப்பட்டது.  இந்த சம்பவம் தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  இந்த புகாரின் அடிப்படையில் கெபிராஜ் மீது போக்சோ சட்டத்தின் (POCSO Act) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு ஆகஸ்ட் 11, 2025 அன்று விசாரணைக்கு வந்ததது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கெபிராஜ் குற்றவாளி என தீரப்பு வழங்கியுள்ளனர்.

பயிற்சியாளர் மீது பாலியல் புகார் அளித்த மாணவி

சென்னை அண்ணா நகர் பகுதியில் கராத்தே வகுப்புகள் நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேறு மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவரை ஜூடோ போட்டிக்காக நாமக்கல் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போட்டியில் பங்கேற்ற பிறகு திரும்பி வரும் வழியில் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த மாணவி சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் கெபிராஜ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க : சிறுநீரகம் திருடப்பட்டதை உறுதி செய்த விசாரணை குழு.. பரிந்துரைகள் என்னென்ன?

இந்த நிலையில் இந்த வழக்கு தமிழக அளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மீதான விசாரணை உரிய முறயில் நடத்தபட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த வழக்கில் அரசியல் கட்சியினர் தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து தற்காப்பு பயிற்சியாளர் மீதான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பெண் காவல் அதிகாரி ஒருவர் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மேலும் ஒரு மாணவி புகார்

கெபிராஜ் மேலும் பல மாணவிகளிடம் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என சிபிசிஐடி போலீசார் அறிவித்தனர். இதனையடுத்து அவர் மீது மேலும் ஒரு மாணவி புகார் அளித்தார். அந்த பெண் வெளிநாட்டில் இருந்ததால் வீடியோ கால் மூலம் வாக்குமூலம் பெறப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிக்க : ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் தற்கொலை.. ஐடி ஊழியரின் சோக முடிவு!

இந்த நிலையில் சுமார் 4 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் கெபிராஜ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் ஆகஸ்ட் 12, 2025  அன்று வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.