முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்.. வாகன பேரணியை தொடங்கி வைத்த துணை முதல்வர் உதயநிதி..
Chief Minister Cup: தமிழ்நாட்டில் மாவட்டம் தோறும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டி சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை நடைபெறும் விழிப்புணர்வு வாகன பேரணியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை, ஆகஸ்ட் 15, 2025: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு அதிகமான மாணவர்கள் மற்றும் மக்கள் கலந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பேரணி நடைபெறுகிறது. இதனை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அதாவது ஆகஸ்ட் 15 2025 தேதியான இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இருக்கக்கூடிய 19 வயதிற்குட்பட்ட மாணவர்களும், 25 வயதிற்கு உட்பட்ட கல்லூரி மாணவர்களும், 15 முதல் 35 வயது வரை இருக்கக்கூடிய பொது பிரிவினருக்கும் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
37 வகையான போட்டிகள்:
மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டுப் போட்டிகளும், மண்டல அளவில் ஏழு வகையான விளையாட்டுப் போட்டிகளும், மாநில அளவில் 37 வகையான விளையாட்டுப் போட்டிகளும், முதல் அமைச்சர் கோப்பை போட்டிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அந்தந்த பிரிவிற்கு ஏற்றார் போல பரிசும் வழங்கப்படுகிறது. பரிசுத் தொகைக்காக 37 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை https://cmtrophy.sdat.in / https://sdat.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலமாக பதிவுகள் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி.. உணவு பரிமாறிய மேயர் பிரியா..
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – விழிப்புணர்வு பேரணி:
விளையாட்டினை மாபெரும் மக்கள் இயக்கமாக்கும் வகையில் ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2025’-ஐ நம் #திராவிட_மாடல் அரசு நடத்துகிறது.
இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, கழக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் இருசக்கர வாகன பேரணியை இன்று தொடங்கி… pic.twitter.com/L92UfUZola
— Udhay (@Udhaystalin) August 15, 2025
அந்த வகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானோர் கலந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் அதனுடைய தலைவர் சர்வதேச மோட்டார் பந்தய வீராங்கனையு நிவேதா ஜெசிக்கா தலைமையில் இன்று (ஆகஸ்ட் 15, 2025) சென்னையிலிருந்து மோட்டார் வாகன பேரணி தொடங்கப்பட்டது.
மேலும் படிக்க: கோயில் கோபுரம் மீது தேசிய கொடியுடன் போராட்டம்.. கீழே இறங்கும் போது உயிரிழந்த சோகம்..
சென்னையில் புறப்படும் இவர்கள் தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை வழியாக தனுஷ்கோடிக்கு சென்றடைகிறார்கள். பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 17 2025 தேதி அன்று அங்கிருந்து புறப்பட்டு அன்றைய நாளே சென்னைக்கு வருகை தருகிறார்கள். இந்த பேரணியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.