கோயில் கோபுரம் மீது தேசிய கொடியுடன் போராட்டம்.. கீழே இறங்கும் போது உயிரிழந்த சோகம்..
Pudukottai Viralimalai Activist Arumugam Protest: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருக்கக்கூடிய முருகன் கோயில் அருகில் இருக்கக்கூடிய ஆக்கிரமிப்பு இடங்கள் அகற்றக்கோரி கோயில் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலரான ஆறுமுகம் என்பவர் கீழே இறங்கும் போது தவறி விழுந்து உயிரிழந்தார்.

புதுக்கோட்டை, ஆகஸ்ட் 15, 2025: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமாலை முருகன் கோயில் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் கீழே இறங்கும்போது வழிக்கு விழுந்து உயிர் இழந்தார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை முருகன் கோயில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு இன்று (ஆகஸ்ட் 15, 2025) தேசியக் கொடியுடன் காலை 7:00 மணிக்கு விராலிமலை முருகன் மலை கோயில் கோபுர உச்சியில் ஏறி போராட்டம் நடத்தியவர் ஆறுமுகம். சமூக ஆர்வலரான இவர் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியது அப்பகுதியினரிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இது தொடர்பான தகவல் உரிய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
கோயில் கோபுரம் மீது ஏறி போராட்டம்:
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள் என கேட்ட பொழுது அவரது கோரிக்கையான முருகன் கோயில் சுற்று இருக்கக்கூடிய ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கூறியுள்ளார். மேலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்தனர். ஆறுமுகத்திடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அவரை கீழே இறங்கும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் கீழே இறங்காமல் பல மணி நேரம் தேசியக் கொடியுடன் கோபுரத்தின் உச்சியில் அமர்ந்திருந்தார்.
Also Read: சென்னை மெட்ரோ ரயில் பணியின் போது விபத்து.. உயிரிழந்த தொழிலாளி..
கீழ இறங்க மறுத்த ஆறுமுகம் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கோரிக்கையை முன்வைத்து தனியார் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது வட்டாட்சியர் அவரது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறி சமாதானப்படுத்தி அவரை கீழே இறங்க வைத்துள்ளனர். இந்த வாக்குறுதியை கொடுத்து பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதன் காரணமாக ஆகஸ்ட் 15 2025 தேதியான இன்று அவர் மீண்டும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கோபுரத்தில் இருந்து கீழே இறங்கும் போது தவறி விழுந்து உயிரிழந்த ஆறுமுகம்:
விராலிமலை முருகன் கோயில் கோபுரம் என்பது 70 அடி உயரம் கொண்ட கோபுரமாகும். அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்திய நிலையில் அவர் கீழ இறங்க சம்மதித்துள்ளார். அப்போது தீயணைப்புத்துறையினரும் மற்றவர்களும் தயாராக இருந்துள்ளனர். இந்த நிலையில் கீழே இறங்கிய ஆறுமுகம் கோயில் கோபுரத்தின் மீது இருக்கக்கூடிய சிற்பங்களை பிடித்து இறங்கியுள்ளார்.
Also Read: குறையும் மழை.. வெப்பநிலை எப்படி இருக்கும்? வானிலை நிலவரம் இதோ..
அப்போது ஒரு கட்டத்தில் அந்த சிற்பம் பிடித்த பொழுது வழுக்கி விழுந்து கீழே விழுந்துள்ளார். இதனை அடுத்து அவர் அருகில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.