இரு குழந்தைகளை கொன்ற வழக்கு.. திடீரென அபிராமி எடுத்த முடிவு.. பறந்த உத்தரவு!
Abirami Murder Case : சென்னையில் 2018ஆம் ஆண்டு திருமணம் மீறிய உறவுக்காக இரு குழந்தைகளை கொன்ற வழக்கில் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. தற்போது, இந்த தீர்ப்பை எதிர்த்து அபிராமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னை, ஆகஸ்ட் 12 : சென்னையில் இரண்டு குழந்தைகளை கொன்ற வழக்கில் (Abirami Murder Case) இளம்பெண் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனை எதிர்தது அபிராமி தற்போது சென்னை உயர் நீதிமன்றம் மேல்முறையீடு செய்திருக்கிறார். இந்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் – அபிராமி. இந்த தம்பதிக்கு நான்கு மற்றும் ஆறு வயதில் இரண்டு குழந்தைகள் இருந்தனர். அபிராமி டிக்டாக்கில் பிரபலமானவராக இருந்து வந்தார். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த மீனாட்சி சந்தரம் என்பவருடம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி, அபிராமி, சுந்தரத்திடம் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து கணவர் விஜய்க்கு தெரியவர, பலமுறை அபிராமியை கண்டித்துள்ளார்.
இரு குழந்தைகளை கொன்ற வழக்கு
ஆனால், அதனை கேட்காத அபிராமி, மீண்டும் சுந்தரத்திடம் பழகி வந்துள்ளார். இதனால், அபிராமி மற்றும் விஜய் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது. இதனால், கணவரை மற்றும் இரு குழந்தைகளை கொலை செய்ய அபிராமி திட்டமிட்டார். அதன்படியே, 2018ஆம் ஆண்டு கணவர் மற்றும் இரு குழந்தைகளுக்கு சாப்பாட்டில் அவர் தூக்க மாத்திரை அதிகளவு கலந்து கொடுத்துள்ளார். இதில், விஜய் உயிர் தப்பிய நிலையில், இரு குழந்தைகளுக்கு பரிதாபமாக உயிரிழந்தது.
Also Read : 23 வயது இளைஞரை கொலை செய்த 16 வயது வடமாநில சிறுமி.. பகீர் சம்பவம்!




இது தொடர்பாக விஜய் புகார் அளித்ததை அடுத்து, அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்துடன் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது, போலீசார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அபிராமி மற்றும் சுந்தரத்தை கைது செய்தனர். இதனை அடுத்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கும் காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
அபிராமி மேல்முறையீடு
நீதிபதி பீஜு செம்மல் தலைமையில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், 2025 ஜூலை மாதம் தீர்ப்பளித்துள்ளார். அதன்படி, மீனாட்சி சுந்தரம் மற்றும் அபிராமிக்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தொடர்ச்சியாக மூன்று ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
Also Read : வால்பாறையில் பயங்கரம்… சிறுத்தை தாக்கி 8 வயது சிறுவன் உயிரிழப்பு!
பணம் செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையல், நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அபிராமி மேல்முறையீடு செய்தார். சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும் அபிராமி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.